அட, கோதுமை மாவில் இப்படி கூட முறுக்கு சுடலாமா? இந்த முறுக்கு ரெசிபியின் ரகசியம் உங்க கொள்ளு பாட்டிக்கு கூட தெரியாது.

murukku
- Advertisement -

பாட்டிகளுக்கே தெரியாத ஒரு சூப்பரான முறுக்கு ரெசிப்பியைத் தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். கோதுமை மாவில் மொருமொரு முறுக்கு. இதை செய்து வைத்து விட்டால் ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரச்சனை ஒரு வாரத்துக்கு இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விருப்பமாக சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த கோதுமை மாவு முறுக்கை சுலபமாக சுவையாக எப்படி செய்வது ரெசிபிக்குள் சென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செய்முறை

முதலில் 2 கப் அளவு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். இட்லி குண்டானில், இட்லி தட்டை வைத்து அதன் மேல் ஈரம் இல்லாத வெள்ளை காட்டன் துணியை போட்டு, அதன் மேலே 2 கப் அளவு கோதுமை மாவை பரப்பி போட்டு விட்டு, அந்த துணியாலயே கோதுமை மாவை மூடி, இட்லிகுண்டானுக்கு மேல் தட்டை மூடி, பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

- Advertisement -

கோதுமை மாவுக்கு மேலே துணி போர்த்தப்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் இட்லி குண்டானுக்கு மேலே மூடப்பட்டிருக்கும் தட்டில் இருந்து ஆவி மாவில் விழுந்து, மாவு ஈரமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஆவியில் கோதுமை மாவு வெந்த பிறகு அதை எடுத்து அகலமான ஒரு பவுலில் போட்டு நன்றாக ஆரவைத்து, உங்கள் கையை கொண்டு பிசைந்து கொள்ளுங்கள். மாவு ரொம்பவும் கட்டி கட்டியாக இருக்கிறது என்றால், இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி கூட பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளலாம். இப்போது அகலமான பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்த கோதுமை மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – 1/4 கப், உப்பு – தேவையான அளவு, சீரகம் –  1/4 ஸ்பூன், காய்ச்சிய எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், ஊற்றி உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து விடுங்கள்.

- Advertisement -

கொதிக்க கொதிக்க சூடான எண்ணெயை ஊற்றிய பின்பு ஜாக்கிரதையாக மாவை பிசையுங்கள். இல்லையென்றால் ஒரு ஸ்பூனை வைத்து கலந்து விடுங்கள். எண்ணெயின் சூடு ஆறி வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து இந்த மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிறகு வழக்கம் போல முறுக்கு அச்சில் தேன்குழல் முறுக்கு, அல்லது ஸ்டார் முறுக்கு அச்சில் தேவையான அளவு மாவை போட்டு முறுக்கு பிழிந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு அள்ளி அள்ளி எடுத்து சாப்பிட சுவையான நிலக்கடலை சட்னி ஈசியாக எப்படி தயாரிப்பது? இப்படி சட்னி செய்து கொடுத்தால் கூடுதலா 2 இட்லி சாப்பிட தோணுமே!

சாதாரணமாக அரிசி மாவு முறுக்கு சுட்டு எடுப்பது போலவே இந்த முறுக்கையும் சுட்டு எடுத்து விடலாம். மொறுமொறுப்பாக முறுக்கு சாப்பிடுவதற்கு அத்தனை சுவையாக கிடைக்கும். எளிமையான இந்த முறுக்கு ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இதில் நாம் வாசனைக்காக சீரகம் சேர்த்து இருக்கின்றோம். உங்களுக்கு தேவைப்பட்டால் எள்ளு, ஓமம் போன்ற பொருட்களை கூட சேர்த்து முறுக்கை தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -