இட்லி, தோசைக்கு அள்ளி அள்ளி எடுத்து சாப்பிட சுவையான நிலக்கடலை சட்னி ஈசியாக எப்படி தயாரிப்பது? இப்படி சட்னி செய்து கொடுத்தால் கூடுதலா 2 இட்லி சாப்பிட தோணுமே!

verkadalai-peanut-chutney1_tamil
- Advertisement -

தேங்காய் சட்னியை தினமும் செய்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு ரொம்பவே எளிதாக செய்யக் கூடிய இந்த நிலக்கடலை சட்னி அதிகம் பிடித்து போய்விடும். இட்லி, தோசைக்கு தொட்டுக்க சூப்பராக இருக்கக் கூடிய இந்த நிலக்கடலை சட்னியை சுலபமாக வீட்டில் எப்படி அரைப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

நிலக்கடலை – 100 கிராம், கடலெண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மல்லி – ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, வரமிளகாய் – நான்கு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை

நிலக்கடலை சட்னி செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு வேர்க்கடலையை எடுத்து ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்து எடுத்த வேர்க்கடலைகள் நன்கு ஆறிய பின்பு அதன் மேல் தோலை கைகளால் கசக்கி ஊதி விடுங்கள். இதனால் தோலை எளிதாக நம்மால் நீக்க முடியும். தோலுரித்த வேர்க்கடலைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் இருக்கும் வாணலியில் கடலெண்ணெய் விட்டு காய விடுங்கள். கடலை எண்ணெய் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். சீரகம் போட்டதும் தனியா விதைகளை சேர்த்து, லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் தோலுரித்து சுத்தம் செய்து வைத்துள்ள பத்து சின்ன வெங்காயத்தை முழுதாக அப்படியே சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் ஓரளவுக்கு வதங்கும் பொழுது நான்கு வர மிளகாய்களை காம்பு நீக்கி காரத்திற்கு ஏற்ப சேர்த்து வதக்குங்கள். இதனுடன் சிறு நெல்லிக்காய் அளவிற்கு ப புளியை விதை, நார் எல்லாம் நீக்கி சேர்த்து வதக்குங்கள். ஒரு முறை எல்லாவற்றையும் நன்கு வதக்கிய பின்பு எடுத்து வைத்துள்ள தோல் உரித்த வேர்க்கடலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.

ரெண்டு நிமிடம் நன்கு வதக்கியதும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். அதன் பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் இவற்றை போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நிலக்கடலை சட்னியை அப்படியே கூட நீங்கள் சாப்பிடலாம் அல்லது தாளிக்க தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
எப்போதும் வைக்கிற தக்காளி சாம்பாரை ஒரு முறை இப்படி வச்சு பாருங்க வெறும் சாம்பாரையே ஊத்தி குடிப்பாங்க. இந்த சாம்பார் டிபன் சாப்பாடு என எல்லாத்துக்குமே செமையா இருக்கும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்து சட்னியில் கொட்டி நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க, இந்த சுவையான நிலக்கடலை சட்னியை அள்ளி அள்ளி எடுத்து இட்லி, தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -