மொறு மொறுன்னு டீக்கடை வெங்காய போண்டாவை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! கடையில வாங்குற போண்டா டேஸ்ட் அப்படியே இருக்கும்.

wheat-bonda
- Advertisement -

சில டீக்கடைகளில் கோதுமை மாவை வைத்து வெங்காய போண்டா சுடுவார்கள். இந்த போண்டா ஒரு தனி சுவையாகத்தான் இருக்கும். நம்முடைய வீட்டில் கோதுமை மாவில் போண்டா செய்தால், அவ்வளவு பக்குவமாக வராது. மொறுமொறுவென அட்டகாசமான ஒரு கோதுமை போண்டா ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த டீக்கடை கோதுமை போண்டா ரெசிபியை தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

wheat-bonda-3

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 1 கப், கடலை மாவு – 1/2 கப், அரிசி மாவு – 1/4 கப், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் நன்றாக கலந்து விட்டு விடுங்கள். அடுத்தபடியாக இந்த மாவில் ஆப்ப சோடா – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகள், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 1, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் உங்கள் கையை வைத்து இந்த மாவை நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து, விரல்களால் மாவுக்கு லேசாக அழுத்தம் கொடுத்து தளதளவென இந்த மாவை போண்டா மாவு பக்குவத்திற்கு கலந்து கொள்ளுங்கள். மாவு ரொம்ப கெட்டியாக பிசைந்து விட்டாலும் போண்டா உள்ளே வேகாது. ரொம்ப தண்ணியாக மாவை கரைத்து விட்டாலும் போண்டாவில் எண்ணெய் குடித்து விடும்.

mini-mysore-bonda2

ஆக மாவு சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். (உளுந்து வடைக்கு மாவை பக்குவமாக எப்படி ஆடுவோம் அதேபோல இந்த மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.) தண்ணீர் ஊற்றி தயார் செய்த போண்டா மாவில் இறுதியாக கொதிக்கின்ற எண்ணெய்யை 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி ஒரு கரண்டியால் கலந்து கொடுங்கள். இப்போது போண்டா சுடுவதற்கு மாவு தயார். (மாவை உங்கள் கைகளால் எடுத்தால் தளதளவென அப்படியே வரவேண்டும். மாவு கையில் இருந்து கீழே விழக்கூடாது.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் நன்றாக சூடானதும், அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, அதன் பின்பு ஒவ்வொரு போட்டோவாக எண்ணெயில் விட வேண்டும். மிதமான தீயில் போண்டா சிவக்க வேண்டும். அப்போது தான் உள்ளே இருக்கும் மாவு வெந்து இருக்கும்.

rava-bonda4

போண்டாவை எண்ணெயில் போட்டு கரண்டியால் திருப்பி விட்டு பொன்னிறமாக சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி எடுத்து பரிமாறுங்கள். சுடச்சுட டீ கடை போண்டா தயாராக இருக்கும். மேலே மொறு மொறுவென உள்ளே சாஃப்ட்டாக அழகாக கிடைக்கும். இன்னைக்கு ஈவினிங் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -