இன்னும் அரிசியை ஊறவைத்து தான் அடை செய்றீங்களா? இந்த அடையை ஒரு வாட்டி, இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Wheat-rava-adai1
- Advertisement -

அடை! நம்மில் பல பேருக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவில் இதுவும் ஒன்று. நம்முடைய பாரம்பரியமான உணவு என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் அடை என்றாலே, அரிசியை ஊறவைத்து தான் செய்வார்கள். கொஞ்சம் வித்தியாசமாக, கோதுமை ரவையை வைத்து 1 மணி நேரத்தில் அடை மாவை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம், நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பருப்பு வகைகளை, கோதுமை ரவையோடு சேர்ப்பதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் டிபன் ஆகவும் இது மாறி விடுகிறது. இந்த கோதுமை ரவை அடை எப்படி செய்வது பார்த்து விடலாமா?

Wheat-rava-adai

கோதுமை ரவை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை – 1 கப், துவரம்பருப்பு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், உளுந்து – 2 டேபிள் ஸ்பூன், பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

வரமிளகாய் – 3, வரமல்லி – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி சிறிய துண்டு, தேவையான அளவு உப்பு, வெங்காயம் – 1, மல்லித்தழை சிறிதளவு.

wheat-rava

Step 1:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு ரவையைப் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக தனியாக ஒரு பாத்திரத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒன்றாகப் போட்டு ஊறவைத்துக் கொள்ளுங்கள். பருப்பும் ஒரு மணி நேரம் வரை ஊறினால் போதும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் வரமிளகாய், தனியா, மிளகு, சீரகம் கருவேப்பிலை, ஒரு கொத்து இஞ்சி இவைகளை போட்டு 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரோடு சேர்த்து அடை மாவில் ஊற்றி அரைக்க போகின்றோம்.

Wheat-rava-adai2

Step 2:
இந்தப் பொருட்கள் எல்லாம் 1 மணி நேரம் ஊறிய பின்பு, கோதுமை ரவையில் இருந்தும், பருப்பு வகைகளில் இருந்து தண்ணீரை வடித்து எடுத்து விடுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, முதலில் பருப்பை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பருப்பு முக்கால் பாகம் அரை பட்டவுடன், அதன் பின்பாக வரமிளகாய் சேர்த்த மசாலா பொருட்களை ஊற வைத்து இருக்கின்றோம் அல்லவா, அதை தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் ஊற்றி விடுங்கள். அடுத்தபடியாக ஊறவைத்து, தண்ணீர் வடித்து வைத்திருக்கும், ரவையையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு போட்டு கொரகொரப்பாக அடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

Wheat-rava-adai3

Step 3:
ரொம்ப தண்ணீர் ஊற்றி தோசை மாவு போல கரைத்துக் கொள்ள வேண்டாம். இந்த அடை மாவில் தேவைப்படுபவர்கள் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்த்து, தோசைக்கல்லில், அடை தோசை போல வார்த்து சாப்பிட்டால் இதன் ருசி சூப்பராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமான இந்த அடையை உங்கள் வீட்டிலும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. ஒரு மணி நேரத்தில சூப்பர் டிபன் செஞ்சிடலாம்.

இதையும் படிக்கலாமே
கோதுமை தோசை ஒட்டாமல் மொறுமொறுன்னு கிரிஸ்பியாக வருவதற்கு இந்த 2 ரகசிய பொருளை சேர்த்து பாருங்கள்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -