கொழுக்கு மொழுக்குன்னு இருக்கும் தொப்பையை கூட, 10 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடலாமே. இந்த தோசையில் 2 சாப்பிடுங்க.

green-dosai
- Advertisement -

கொழுக்கு மொழுக்கென்று பெரியதாக இருக்கக்கூடிய தொப்பையை கூட மிக மிக சுலபமாக கரைப்பதற்கு ஒரு வழி உள்ளது. தினமும் நாம் சாப்பிடக்கூடிய தோசையை கொஞ்சம் வித்தியாசமாக, வித்தியாசமான பொருட்களை வைத்து செய்யப் போகின்றோம். அவ்வளவு தான். இந்த தோசை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. அதேசமயம் தேவையற்ற இடங்களில் இருக்கக்கூடிய சதைகளை கரைக்கக் கூடிய தோசை ஆகவும் இருக்கப்போகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடக்கூடிய ‘கோதுமை சுரைக்காய் தோசை’ எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இந்த தோசை செய்வதற்கு சம்பா கோதுமை வாங்கி சுத்தம் செய்து அதை கடையில் கொடுத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சம்பா கோதுமையில் இந்த தோசையை செய்தால் இரட்டிப்பு பலன் இருக்கும். சம்பா கோதுமை மாவு இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் சாதாரண கோதுமை மாவிலும் இந்த தோசையை ட்ரை பண்ணலாம்.

- Advertisement -

முதலில் பிஞ்சாக இருக்கக்கூடிய சுரைக்காயை வாங்கி தோல் சீவி வெட்டி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, கொஞ்சம் பொடியாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 1 கப் அளவு சுரைக்காய் நமக்கு தேவைப்படும்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெட்டி வைத்திருக்கும் சுரைக்காய், கருவேப்பிலை – 3 கொத்து, மல்லி தழை – கைப்பிடி அளவு, இஞ்சி – 1 இன்ச் அளவு, சீரகம் – 1/4 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இதை விழுதுபோல் அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த விழுதோடு 150 கிராம் – கோதுமை மாவை போட்டு நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்திற்கு இந்த மாவை கரைத்துக் கொள்ளவேண்டும். இந்த மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் கோதுமை ரவையை சேர்த்து நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு உப்பு போட்டு மூடி இதை அப்படியே பத்து நிமிடங்கள் ஊற விட்டு விடுங்கள். (மாவை ரொம்பவும் தண்ணீராக கரைத்துக் கொள்ள வேண்டாம். கொஞ்சம் திக்காக இருக்கட்டும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கூட ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்.)

எப்போதும் போல தோசைக்கல்லை அடுப்பில் வைத்து விட்டு எண்ணெய் கொஞ்சம் ஊற்றி தோசை கல்லில் தடவி இந்த மாவை எடுத்து தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக வார்த்து நல்லெண்ணெய் ஊற்றி சிவக்க விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இந்த தோசையை காலை உணவிற்காக எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் 3 லிருந்து 4 நாட்கள் வரை கூட இந்த தோசை சாப்பிடலாம். தவறு கிடையாது. இதற்கு தொட்டுக்கொள்ள காரச் சட்னி, தேங்காய் சட்னி உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பவர்கள் மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பவர்கள் எல்லோரும் இந்த தோசை சாப்பிடலாம்.

- Advertisement -