பரிகாரத்திற்கு பின் தோஷம் நீங்கிவிட்டதா இல்லையா என எப்படி உறுதிசெய்வது ?

parigaaram-6

ஜாதகரீதியாக பெரும்பாலான கிரக தோஷங்களுக்கு பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை செய்து முடித்தபின்னர், தோஷம் நிவர்தியாகிவிட்டதா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

parigaaram

ஒருவருக்கு ஜுரம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை சரி செய்ய ஒரு மாத்திரை போட்டால் குறைந்தது ஒருநாளில் ஜுரம் சரியாகும். அனால் ஜுரம் சரியானதா இல்லையா என்பதை நாம் அனுபவத்திலிருந்துதான் தெரிந்து கொள்ள முடியும். அதுபோலதான் பரிகாரமும்.

சாதாரண ஜுரம் சரியாகவே ஒரு நாள் எடுக்கிறது என்றால் நாம் பிறந்ததில் இருந்து நம்மோடு இருக்கும் தோஷம் விலக சில மாதங்கள் ஆகும். அனால் ஒரு சிலர் ஒரு வாரத்திலேயே பரிகாரத்தைக்கான பலனை எதிர்பார்ப்பார்கள். அது மிக பெரிய தவறு.

parigaaram

கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும். அதுவரை பொறுமை காப்பதே சிறந்ததது.

parigaaram

அதற்குள் நாம் செய்த பரிகாரம் வேலை செய்கிறதா இல்லையா என்பதை நம்மால் உணர முடியும். 6 மாதத்தை கடந்ததும் எந்த பலனும் இல்லை என்றால் பரிகாரத்தை சரியானை முறையில் செய்யவில்லை என்பதே காரணமாக இருக்க முடியும். அதனால் மீண்டும் சரியான முறையில் பரிகாரம் செய்வதே சிறந்தது.