குளிகை நேரம் என்றால் என்ன ?

astrology-1
- Advertisement -

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சரி, குளிகை நேரம் என்றால் என்ன? யார் அந்த குளிகன். குளிகை நேரத்தில் நாம் எதை செய்யலாம் எதை செய்ய கூடாது. தினம் தோறும் வரும் குளிகை நேரம் எப்போது வரும். இப்படி பல தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

astrology

சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியினருக்கு மகனாய் பிறந்தவர் தான் குளிகன் என்று புராணங்கள் கூறுகிறது. இவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு. அதேபோல மாந்தி என்றொரு தங்கையும் இவருக்கு உண்டு. குளிகனின் தாயான ஜேஷ்டாதேவியே மூதேவி என்று அழைக்கப்படுகிறார்.

- Advertisement -

ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் பொதுவாக பலர் எந்த நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள். அப்படி செய்தால் அந்த செயலில் ஏதாவது தடை வரும் என்பது நம்பிக்கை. அதே போல குளிகை நேரத்திற்கும் சில தனி சிறப்புகள் உண்டு. ஒருவர் எந்த ஒரு செயலையும் குளிகை நேரத்தில் துவங்கினால் அந்த செயலை அவர் திரும்ப திரும்ப செய்வார் என்பது நம்பிக்கை.

rahu-ketu

உதாரணத்திற்கு ஒரு குளிகை நேரத்தில் நகை வாங்குகிறார் என்றால், மீண்டும் மீண்டும் நகை வாங்குவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். அதே போல ஒருவர் குளிகை நேரத்தில் நகையை அடகு வைத்தால் மீண்டும் மீண்டும் நகையை அடகு வைக்க நேரிடும் என்பது நம்பிக்கை. அதனால் பொதுவாக குளிகை நேரத்தில் நமக்கு வளர்ச்சி தரும் காரியங்களை செய்வது நல்லது.

- Advertisement -

house

பதிவின் நீளம் கருதி, குளிகன் பிறப்பின் ரகசியம் மற்றும் அவருக்கு மட்டுமே ஏன் இத்தனை சிறப்பு போன்ற விடயங்கள் வேறு பதிவில் கூறி உள்ளோம். அவை அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புவோர். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
அதிஷ்ட நேரத்திற்கு சொந்தமான குளிகனை பற்றிய விவரங்கள்

தினம் தோரும் உள்ள குளிகை நேரத்திற்கான அட்டவணை

கிழமைகள் பகல் பொழுது இரவுப் பொழுது
ஞாயிறு 03.00 – 04.30 09.00 – 10.30
திங்கள் 01.30 – 03.00 07.30 – 09.00
செவ்வாய் 12.00 – 01.30 12.00 – 01.30
புதன் 10.30 – 12.00 03.00 – 04.30
வியாழன் 09.00 – 10.30 01.30 – 03.00
வெள்ளி 07.30 – 09.00 12.00 – 01.30
சனி 06.00 – 07.30 10.30 – 12.00

English overview:
Here we have details about Kuligai neram in Tamil. Kuligai neram is good or bad, Kuligai neram means what in Tamil, kuligai neram endral enna, kuligai neram palan all these details are discussed in the above article.

- Advertisement -