எந்த திசையில் தலைவைத்து தூங்கினால் ஆரோக்கியமாக வாழலாம் தெரியுமா?

sleepinp-direction

மனிதர்களின் பாதி வாழ்க்கை தூக்கத்தில் தான் கழிகிறது. ஒரே ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு எந்த வேலையும் சரியாக செய்யமுடியாது. ஒருநாள் உணவு சாப்பிடவில்லை என்றாலும் பாதிப்பில்லை. ஆனால் இரவு தூக்கமானது மனிதனுக்கு மிகவும் முக்கியம். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் தூக்கத்தின் போது ஒரு மனிதன் எந்த திசையில் தலைவைத்து படுத்தால் சிறந்தது என்பதை ஆன்மீக ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆராய்வோம் வாருங்கள்.

direction

சித்தர்களின் வாக்கு:

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவுகளும், அதிச்சியும் உண்டாகும்.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்துப் படுத்து தூங்கக்கூடாது.

sleeping positions

வடக்கு

- Advertisement -

வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது சரியானது அல்ல. ஆன்மீக ரீதியாக இறந்தவர்களின் உடலை தான் இந்த திசையில் வைப்பார்கள். நம் ஆத்மா நம் உடலை விட்டுப் பிரிந்த பின் வடக்கு திசையை நோக்கித் தான் செல்லும். அப்படி நீங்கள் வடக்கு திசை நோக்கி தலைவைத்து படுத்தால் கெட்ட கனவுகள் வருவதற்கும், உங்கள் தூக்கம்  கெடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும். இதையே அறிவியல் பூர்வமாக பார்த்தால் பூமியில் உள்ள காந்த கோடுகள் வடக்கு பக்கம் நோக்கி செல்கிறது. இதனால் அந்த காந்தவிசையானது உங்கள் மூளைக்கு பிரச்சினைகளைக் கொடுக்கும். இதன்மூலம் உங்கள் மூளை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே வடக்கு திசையில் தலை வைத்து படுக்காதீர்கள்.

தெற்கு

தெற்கு திசை நோக்கி தலைவைத்து படுத்தால் மிகவும் நல்லது. நம் முன்னோர்களும் காலம் காலமாக இதை தான் நமக்கு கூறி வருகின்றனர். நாம் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் பொழுது நம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது. நம் உடலுக்கு சுறுசுறுப்பும், ஆற்றலையும் தருகிறது. இதனால் நாம் செய்யும் வேலையில் ஈடுபாடு உடன் செயல்படுவோம். வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நம் ஆயுளை நீட்டிக்கவும் இந்த திசை சரியானது என்று கூறப்படுகிறது.

sleeping in north direction

கிழக்கு

கிழக்கு பக்கம் தலை வைத்து படுப்பது மூலம் உடலில் உள்ள ஆரோக்கிய குறைபாடு, நோய்கள் சரி செய்யப்படும். மாணவர்கள் இந்த திசையில் தலை வைத்து தூங்கினால் ஞாபகசக்தி அதிகரிக்கப்படுகிறது. நம் உடலின் செரிமானத்தை சீராக வைத்திருக்கும். இப்படி கிழக்கு நோக்கி தலை வைத்து படுக்கும் போது நாம் பல நன்மைகளை அடையலாம்.

மேற்கு

இந்த திசையை நோக்கி தலை வைத்து தூங்கினால் உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதை உணர்வீர்கள். எந்த எதிர்மறை சக்தியும் உங்களை நெருங்காது. மேற்கு திசை என்பது வெற்றியை தரும் திசையாகும். புகழ்ச்சியை தேடி நீங்கள் செல்ல வேண்டாம். அது உங்களை தேடி தானாகவே வரும்.

Sleeping Position

மல்லாந்தும், குப்புறப்படுத்து தூங்கக்கூடாது. மாறாக வலக்கை மேலாகவும், இடக்கை கீழாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரிப்பதோடு உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். அதோடு இதயத்திற்கு தேவையான பிராணவாயு சீராக கிடைக்கும். இதனால் ஆயுள் நீடிக்கும். மாறாக வலது பக்கமாக ஒருக்களித்து படுப்பதால் ஜீரணக்கோளாறு ஏற்படும். இதனால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரும்.