எந்த ராசிகாரர்களுக்கு எந்த எழுத்தில் பெயர் இருந்தால் அதிஷ்டம் கூடும்

astrology

பெயர் என்பது ஒருவரின் மிகப்பெரிய அடையாளமாக கருதப்படுகிறது. அந்த அடையாளமானது சிறப்பானதாகவும் கிரகங்களின் சக்தி பெற்றதாகவும் இருந்தால் அந்த பெயருக்குரியவர் வாழ்வில் நல்ல நிலைக்கு செல்வது எளிதாக இருக்கும். அந்த வகையில் எந்த ராசிக்காரருக்கு எந்த எழுத்தில் பெயர் ஆரமித்தால் நல்லது என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamஎந்த செயலையும் வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசிக்காரர்கள், தான் இருக்கும் இடத்தில் பெரும்பாலும் தலைமைத்துவதோடு இருப்பார்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ
ஆங்கிலம்: A, E, I, L, O

ரிஷபம்:
rishabamபொருள்களை ஈட்டுவதில் வல்லமை கொண்ட ரிஷப ராசி நண்பர்கள் கம்பீரமாக இருப்பார்கள். வாழ்வில் எப்போதும் சொகுசாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: ஈ, உ, ஏ, ஓ, வா, வீ, வூ, வே, வோ
ஆங்கிலம்: B, U, V, W 

மிதுனம்:
midhunamசாமர்த்தியமாக பேசி உறவுகளை வளர்ப்பதில் வல்லவர்கள் மிதுன ராசி நண்பர்கள். இவர்கள் தங்களுடைய கடின உழைப்பினால் செல்வமும் செல்வாக்கும் பெறக்கூடியவர்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

- Advertisement -

தமிழ்: கா, கீ, கூ, க, ட, ச, கே, கோ, ஹ
ஆங்கிலம்: C, G, K, Q

கடகம்:
kadagamஎல்லோரிடமும் பேரன்பாய் இருக்கும் கடக ராசி நண்பர்கள், நிலவின் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது நிலவு எப்படி 15 நாட்கள் தேய்ந்தும் 15 நாட்கள் வளரவும் செய்கிறதோ அது போல இவர்கள் சில நேரம் பொறுமையாகவும் சில நேரம் அடங்கா கோபமுடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: ஹி, ஹூ, ஹே, ஹோ, டா, டீ, டூ, டே, டோ
ஆங்கிலம்: H, D

சிம்மம்:
simmamஎங்கு சென்றாலும் தன் பின் ஒரு கூட்டம் இருக்கும்படி பிறரை எளிதில் வசீகரிப்பவர்கள் சிம்ம ராசி நண்பர்கள். செல்வம் செல்வாக்கு சொத்து என இவர்களுக்கு அனைத்தும் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: மா, மீ, மூ, மே, மோ, டா, டீ, டூ, டே
ஆங்கிலம்: M, T

கன்னி:
kanniதன்னிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்துண்ணும் தன்மை கொண்டவர்கள் கன்னி ராசி நண்பர்கள். இவர்களின் முற்பகுதியில் பல பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்வில் பிற்பகுதியில் சந்தோசமாக வாழும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: டோ, பா, பீ, பூ, ஷ, ந, ட, பே, போ
ஆங்கிலம்: P, T, S

துலாம்:
thulamஆணித்தரமான பேச்சை கொண்ட துலாம் ராசி நண்பர்களுக்கு செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் எப்போதும் உண்டு. தேவை இல்லாமல் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் தன் குடும்பத்தின் முன்னேற்றத்தை பற்றி எப்போதும் சிந்திக்கும் இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: ரா, ரீ, ரூ, ரே, ரோ, தா, தீ, தூ, தே
ஆங்கிலம்:R, T

விருச்சிகம்:
virichigamஎப்போதும் எதையும் மனதிலேயே வைத்துக்கொள்ளும் விருச்சிக ராசி நண்பர்கள், தவறை எதிர்த்து நறுக்கென்று கேள்வி கேட்கும் தன்மை கொண்டவர்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: நா, நீ, நூ, நே, நோ, யா, யீ, யூ
ஆங்கிலம்: N, Y

தனுசு:
dhanusuதங்களின் கல்வி அறிவை கொண்டு அரசாங்கத்தில் உயர் பதவி வரை செல்லும் ஆற்றல் கொண்டவர்கள் தனுசு ராசி நண்பர்கள். இவர்களின் அமைதிக்கு பின்பு எப்போதும் ஒரு ஆழ்ந்த சிந்தனை இருக்கும். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: யே, யோ, பா, பீ, பூ, தா, டா, பே
ஆங்கிலம்: B, D, F, Y

மகரம்:
magaramகடினமாக உழைக்கும் தன்மை கொண்ட மகர ராசி நண்பர்கள், தன் உழைப்பின் மூலம் அனைத்து சுகங்களையும் அடைவர். நண்பர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி செல்லும் இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: போ, ஜா, ஜீ, கீ, கூ, கே, கோ, கா
ஆங்கிலம்: J, K, B

கும்பம்:
kumbamபிறர் செய்யும் கெடுதல்களை கூட உடனே மறக்கும் தன்மை கொண்டவர்கள் கும்ப ராசி நண்பர்கள். இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தை சிறந்த இடமாக மாற்றும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: கூ, கே, கோ, சா, சீ, சூ, சே, சோ, தா
ஆங்கிலம்: G, S

மீனம்:
meenamபிறரிடம் எப்போதும் அன்பு செலுத்தும் தன்மை கொண்ட மீன ராசி நாண்பர்கள் சற்று முன்ஜாக்கிரதையாகவும் இருப்பார்கள். இவர்களின் பெயர் கீழே உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் ஆரமித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

தமிழ்: தீ, தூ, த, ச, ஞ, தே, தோ, சா, சீ
ஆங்கிலம்: C, D, T