எந்த ராசிக்காரர் எந்த விநாயகரை வழிபடுவது சிறந்தது தெரியுமா ?

0
3397
astrology-vinayagar
- விளம்பரம் -

மேஷம்:
meshamஇலட்சியத்தை நோக்கி ஓடும் மேஷ ராசி நண்பர்கள் பொதுவாகவே தன் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். தன் மனதிற்கு ஒரு விஷயம் சரி என பட்டால் அதை எவர் தடுத்தாலும் செய்து முடிப்பார்கள். செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற இவர்கள் வழிபடவேண்டியது வீர கணபதி.

ரிஷபம்:
rishabamபழைய சித்தாந்தங்கள் மீது சற்று நம்பிக்கை கொண்ட ரிஷப ராசி நண்பர்கள் இயற்கையாகவே ராஜயோகம் பெற்றவர்களாக திகிழ்வார்கள். நீங்கள் சாதுவாக இருந்தாலும் உங்களை ஒருவர் தோற்கடிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பணத்தை கணக்கு போட்டு செலவு செய்யும் நீங்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள். நீங்கள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் இருக்கும் ஸ்ரீவித்யா கணபதியை வழிபடுவது சிறந்தது.

மிதுனம்:
midhunamநெருங்கிப் பழகும் நண்பர்களிடம் கூட உதவி கேட்க தயங்கும் மிதுன ராசி நண்பர்கள் எப்போதும் தன்மானதோடு வாழ நினைப்பார்கள். சொந்த திறமை கொண்டு வாழ்வில் படிப்படியாக வளர்ச்சி அடையும் உங்களுக்கு கண்திருஷ்டி அவ்வப்போது வந்து சேரும். ஆகையால் நீங்கள் வழிபட வேண்டியவர் கண் திருஷ்டி கணபதி.

Advertisement

கடகம் :
kadagamஎந்த துறையில் இருந்தாலும் பிரகாசிக்கும் கடக ராசி நண்பர்கள் தன் அன்பான பேச்சாலும் அசாத்திய திறமையாலும் அனைவரையும் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பீர்கள். அவ்வப்போது கோபத்தையும் முடிந்தவரை புன்னகையையும் வெளிப்பதுதும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

சிம்மம்:
simmam
ஒரு முடிவை எடுத்த பின்பு அதில் இருந்து பின் வாங்காத குணம் கொண்ட சிம்ம ராசி நண்பர்கள், தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்திலும் வேகத்தோடு செயல்படும் நீங்கள் உங்கள் இலக்கை அடைந்தே தீருவீர்கள். தைரியத்திற்கு பஞ்சம் இல்லாத நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.

கன்னி:
kanniஅடுத்தவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்களான கன்னி ராசி நண்பர்கள், எப்போதும் தன் மனதிற்கு பிடித்த வேலைகளையே செய்ய எண்ணுவார்கள். இவர்கள் தன் துணையுடன் இணைந்து செய்யும் எதிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் வழிபட வேண்டியவர் உச்சிஷ்ட கணபதி.

துலாம்:
thulamஅனைவரையும் சமமாக மதித்து பழகும் துலாம் ராசி நண்பர்கள் எதிலும் நீதி தவறாமல் இருப்பார்கள். இலட்சியத்தை நோக்கி எப்போதும் ஓடும் நீங்கள், விட்டு கொடுத்து வாழ்வதில் மிக சிறந்தவர்களாக இருப்பீர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

விருச்சிகம்:
virichigamஎதையும் விடாப்பிடியாக பிடித்துக்கொள்ளும் விருச்சிக ராசி நண்பர்கள் ஒரு காரியத்தை பொறுமையாக செய்தாலும் அதில் வெற்றி காணும் வரை முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். மனதில் இருக்கும் விஷயத்தை அவ்வளவு எளிதில் வெளிகாட்டிகொள்ளாத நீங்கள் வழிபட வேண்டியவர் நர்த்தன கணபதி.

தனுசு:
dhanusuஎதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகும் தனுசு ராசி நண்பர்கள் எதிலும் போராடி வெற்றி காண்பீர்கள். நட்பை மதிக்க தெரிந்த நீங்கள் பணத்தை விட மனதிற்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்களை மதிக்காதவர்களை தூக்கி எறிந்துவிட்டு செல்லும் நீங்கள் வழிபட வேண்டியவர் சங்கடஹர கணபதி.

மகரம்:
magaramசோர்வு என்பதே இல்லாமல் எப்போதும் புதிய சிந்தனைகளோடு வளம் வரும் மகர ராசி நண்பர்களே, நீங்கள் எவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்தாலும் அதில் இருந்து மீண்டு வரும் திறன் உங்களிடம் இருக்கும். உங்கள் மனதை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் உங்களை யாராலும் அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது. நீங்கள் வழிபடவேண்டியவர் யோக கணபதி.

கும்பம்:
kumbamமனதில் இருக்கும் விஷயங்களை உள்ளுக்குள் மறைத்துவைத்து கொள்ளும் கும்ப ராசி நண்பர்களே, உங்களிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த பல நேரம் உங்களுக்கு ஒரு தூண்டுகோல் அவசியமாகிறது. எதையும் எளிதில் கற்றுக்கொண்டு செயல்புரியும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

மீனம்:
meenamகுழந்தைகளின் மனமும் குணமும் கொண்ட மீனா ராசி நண்பர்கள் எப்போதும் பணத்தை காட்டிலும் மனதிற்கே முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் இமேஜ் எப்போதும் பாதிக்கப்பட கூடாது என்று என்னும் நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்ததை அடையும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். நீங்கள் வழிபடவேண்டியவர் பால கணபதி.

இது போன்று மேலும் பல ஜோதிடம் சம்மந்தமான தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

Advertisement