எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எதெல்லாம் அதிஷ்டம் தரும்

murugan

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விஷேடமானதாகும். சுப காரியங்களில் ஈடுபடலாம். ருத்திரனை வழிபடுவது நல்லது. மாணிக்க கல் அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டம் தருபவை. கிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரஞ்ச் நிறம் ராசியானது.

numbers

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு திங்கள் கிழமை விஷேடமானதாகும்; முக்கியமான காரியங்களில் ஈடுபடலாம். கௌரியை வழிபடலாம்.

வெண் முத்து அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்களால் அதிர்ஷ்டம் உண்டு. வடமேற்கில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எண் 7-ம் இரண்டாம் எண் காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். வெள்ளை நிறம் ராசியானது.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வியாழக்கிழமை விஷேம்; முக்கியப் பணிகளில் ஈடுபடலாம். ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடவும். கனகபுஷ்பராகம் அணிவதன் மூலம் அதிர்ஷ்டம் கூடும். 2, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. வடகிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். மஞ்சள் நிறம் ராசியானது.

numbers

- Advertisement -

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன், வெள்ளிக் கிழமைகள் விஷேடமானவை. குறிப்பிட்ட கிழமைகளில் முக்கிய பணிகளில் ஈடுபடலாம். கோமேதகம் அணியலாம். 1, 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. துர்கையை வழிபடவும். தென்மேற்கு திசையில் இருந்து நலம் உண்டாகும். கறுப்பு நிறம் ராசியானது.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன் கிழமை சிலாக்கியமானது. அந்தக் கிழமையில் முக்கிய பணிகளில் ஈடுபடலாம். 5, 6 எண்கள் அதிர்ஷ்டமானவை. மரகதக்கல் அணிவது நல்லது. ஸ்ரீமகா விஷ்ணுவை வழிபடுவதால் நன்மை பெருகும்.வட திசையில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். பச்சை நிறம் ராசியானது.

numbers

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர் களுக்கு வெள்ளிக்கிழமை விஷேடமானது; அன்று முக்கியமான காரியங்களில் ஈடுபடலாம். வைரக்கல் அணிவது நல்லது. 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. மகாலட்சுமி வழிபாடு சாலச்சிறந்தது. தென் கிழக்கு யோகமானது. இளநீலமும், வெண்மை நிறமும் ராசியானவை.

 

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு திங்கள்கிழமை சிறப்பானது; அன்று முக்கிய பணிகளில் ஈடுபடலாம். வைடூரியம் அணியலாம். வடமேற்கு திசை விஷேடமானது. 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. கணபதியை வழிபடுவதால் நலம் கூடும். மெரூன் நிறம் ராசியானது.

calendar

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் விஷேடமானவை. நீலக்கல் நல்லது. மேற்கில் இருந்து நலம் உண்டாகும். 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஐயப்பனையும் வழிபடலாம். கறுப்பு, கருநீல நிறம் ராசியானவை.

 

 

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், வியாழக்கிழமைகள் விஷேடமானவை. செம்பவளம் அணியலாம். தென் திசையில் இருந்து நலம் உண்டாகும். 1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. திருமுருகனை வழிபடவும். சிவப்பு நிறம் ராசியானது.