முதலையின் பல்லை எந்த ராசிக்காரர்கள் அணிந்து கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும் தெரியுமா?

12 ராசிக்காரர்களில் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. அதில்

panjabootham

நெருப்பு ராசிகள்:
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகள் நெருப்பை குறிப்பன.

நில ராசிகள்:
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகள் நிலத்தை குறிப்பன.

காற்று ராசிகள்:
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகள் காற்றை குறிப்பன.

நீர் ராசிகள்:
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகள் நீரை குறிப்பன என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்களும் நெருப்பு ராசிக்காரர்கள் ஆதலால் அதிகம் கோபப்படுபவர்களாக இருப்பார்கள். அதேபோல் ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் நில ராசிக்காரர்கள் ஆதலால் பூமாதேவியை போன்ற பொறுமைசாலிகள் ஆகவும் இருப்பார்களாம். கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் நீர் ராசிக்காரர்கள் ஆதலால் நீரைப் போன்ற இளகிய தன்மையுள்ள மனது கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

முதலை பல் ஏன் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது?

முதலையின் பெருமைகளாக கூறப்படுவது: கிராமங்களில் முந்தைய காலத்தில் மழை காலம் வரும் பொழுது ஆறு, குளம், குட்டைகளில் தவளைகளின் சத்தம் அதிகமாக காணப்படும். இதனால் நிம்மதியான உறக்கம் கெடும். எனவே கிராம மக்கள் என்ன செய்வார்கள் என்றால் முதலையின் கொழுப்பால் உருவான நெய்யை கொண்டு தீபம் ஏற்றி தவளைகள் இருக்கும் இடங்களில் வைப்பார்கள். அந்த தீபம் எரிந்து முடியும் வரை தவளைகள் அமைதியாக இருக்கும்.

முக்காலத்தையும் கூறும் கோடாங்கி, குடுகுடுப்பைக்காரர்கள், குறி சொல்பவர்கள் போன்றவர்கள் இரவில் நடமாட வேண்டியிருப்பதால் அவர்கள் முதலையின் பல் மற்றும் அரிதாரத்தை கொண்டு மந்திர உச்சாடனம் செய்து இடையில் முடிந்து கொள்வார்கள். அதனால் இரவிலும் கூட இவர்களால் தைரியமாக நடந்து செல்ல முடிகிறது. நாய்கள் இவர்களை பார்த்து குறைக்காது அமைதியாக ஒதுங்கி விடும். இதேபோல் கிடா ஆடு வளர்ப்பவர்கள் அதன் நெற்றிப்பொட்டில் முதலை கொழுப்பை தேய்த்து விடுவார்கள். இவ்வாறு செய்வதால் கிடா ஆடு பெண் ஆட்டிடம் செல்லாது.

crocodile-tooth

முதலையின் பல் ராசிக்குரியதாக கருதப்படுகிறது. அதில் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது பலரும் அறியாத ரகசியமாகும். இவ்வாறு இருக்க நீர் ராசியான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் நீரில் வாழும் முதலையின் தெய்வீக சக்தி பொருந்திய பல்லை டாலராகவோ அல்லது மோதிரமாகவோ செய்து அணிந்து கொண்டால் அவர்களுக்கு வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அரணாக நின்று அந்த பல் பாதுகாக்கும். எந்த விதமான துஷ்ட சக்திகளும் அவர்களை அணுகாது. கண்திருஷ்டி பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள், வசியம் செய்யும் மந்திரங்கள், மைகள் என்று எதுவும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அதிக சக்தி வாய்ந்த இந்த முதலை பல்லை அனைவரும் அணிந்து கொள்வது கூடாது.

crocodile-tooth1

கடகம், விருச்சிகம், மீனம் இந்த மூன்று ராசிக்காரர்கள் புதியதாக தொழில் தொடங்க இருக்கும் பொழுது இந்த முதலை பல்லை வைத்து ஆரம்பித்தால் தொழில் பிரகாசமாக இருக்கும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் தீர்ந்து விடும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களது வாகனத்தில் இதனை தொங்க விட்டால் விபத்து ஏற்படுவதை தடுக்கும். உங்கள் உயிரை பாதுகாக்கும் சக்தியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் இரண்டு பேர் ஒரே வீட்டில் இருக்கக் கூடாதா? அப்படி இருந்தால் பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have What zodiacs wear. Astrology in Tamil. Astrology remedies for good luck. Good luck in astrology.