4 பொருளில் இரண்டு வகையான சட்னி ரெசிபி இப்படி அரைச்சி கொடுத்தா நாலு இட்லி சாப்பிடுற இடத்துல 10 இட்லி கூட சாப்பிடலாமே!

kara-chuntey-recipes
- Advertisement -

காலையில் எழுந்ததும் என்னடா சட்னி அரைப்பது? என்று யோசிப்பவர்களுக்கு இந்த ஒரு சட்னி ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். இதற்கு நிறைய பொருட்கள் தேவையில்லை, நாலு பொருட்கள் இருந்தால் போதும், விதவிதமா சட்னி செஞ்சு அசத்தலாம். அப்படியான ஒரு ஈசி கார சட்னி ரெசிபி இரண்டினை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். காரசாரமான காரச் சட்னி செய்முறை விளக்கத்தை இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.

காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி – 3, பெரிய வெங்காயம் – 2, பூண்டு பல் – 10, வரமிளகாய் – 3. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

காரச் சட்னி செய்முறை விளக்கம் இதோ:
இந்த கார சட்னி செய்வதற்கு முதலில் மூன்று பெரிய தக்காளி பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல வெங்காயம், பூண்டு போன்றவற்றையும் தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜார் அல்லது நீங்கள் அம்மிக்கல் வைத்திருந்தால் அதில் தக்காளி, வெங்காயம், பூண்டு பல் இவற்றுடன் காரத்திற்கு வர மிளகாயை சேர்த்து நன்கு இடித்து ரொம்பவும் நைசாக அல்லாமல் கொர கொரன்னு அரைச்சு எடுத்துக்கணும்.

பிறகு இதற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக சிவக்க வறுத்து தாளித்து பரிமாறி பாருங்கள். 10 இட்லி கூட அசராமல் சாப்பிடலாம், அந்த அளவிற்கு ரொம்பவே ருசியாக இருக்கும் இந்த கார சட்னியை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – ரெண்டு டேபிள் ஸ்பூன், பெரிய தக்காளி – இரண்டு, பெரிய வெங்காயம் – இரண்டு, வரமிளகாய் – நான்கு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

தக்காளி சட்னி செய்முறை விளக்கம் இதோ:
இந்த தக்காளி சட்னி செய்வதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து வறுபடும் பொழுது வரமிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் உளுந்து நிறம் மாறியதும் வெங்காயம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதிகம் வறுபட வேண்டிய அவசியம் இல்லை, அதன் பிறகு தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருட்களை எல்லாம் தாளிச்சு சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம் அவ்வளவு ருசியாக இருக்கும்! இனி கோதுமை தோசை தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

வெங்காயம், தக்காளி ஓரளவுக்கு வதங்கியதும் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பின்பு தாளிக்க எண்ணெய் விட்டு காய விடுங்கள். அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை ஆகியவற்றை சிவக்க வறுத்து தாளித்து சேர்த்தால் அவ்வளவு டேஸ்டியான தக்காளி சட்னி ரெசிபி ரெடி! தக்காளி சட்னி, கார சட்னி செய்வதற்கு அதிக பொருட்கள் இனி தேவை இல்லை! இப்படியும் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -