திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பது கிடையாது ஏன் தெரியுமா?

0
1778
murugan
- விளம்பரம் -

உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சூரசம்ஹாரம் நடைபெறுவது முக்கிய நிகழ்வு. ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹார விழா நடப்பது கிடையாது. வாருங்கள் அதற்கு என்ன கரணம் என்று பார்ப்போம்.

murugan

தேவர்களையும் முனிவர்களையும் சூரபத்மன் என்னும் அசுரன் மிகவும் கொடுமை படுத்தினான். ஈசனிடம் பல அற்புத வரங்களை பெற்றதால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. ஈசன் தன் நெற்றிக்கண் சுடர் மூலம் முருகனை அவதரிக்க செய்து சூரபத்மனின் அழிவிற்கு வித்திட்டார்.

Advertisement

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமானின் சீற்றம் முழுவதும் தணிந்த பின் அமர்ந்த மலையே திருத்தணி என்று புராணங்கள் கூறுகிறது. ஆகையால் மற்ற கோவிலில்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றாலும் இங்கு முருகனின் சீற்றத்தை தணிக்க புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம்.

Murugan

சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. தேவர்களின் துயர் துடைத்ததோடு அடியவர்களின் கவலையையும், துன்பத்தையும் தணிக்கும் தலம் இது என்பதால் திருத்தணி என்று பெயர் பெயர்பெற்றதாக கூறப்படுகிறது.

murugan

இதையும் படிக்கலாமே:
இஷ்ட தெய்வம் வடிவில் நேரில் காட்சி கொடுத்த சாய் பாபா – உண்மை சம்பவம்

திருத்தணி மலை நோக்கி சென்றாலோ, திருத்தணி முருகனை நினைத்தாலோ, திருத்தணி மலை இருக்கும் திசை நோக்கி வாங்கினாலோ முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் என்கிறது தணிகை புராணம்.

Advertisement