விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை தெரியுமா?

vinayagar-silai1

நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அதில் ஒன்று தான் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதும் .

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும். அதனால் அங்கே ஆற்றின் நீா் நிலத்தல் இறங்காமல் ஓடி சென்று கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் ஆற்றின் நீரானது களிமண்ணால் உறிஞ்சப்பட்டு பூமியில் இறங்கும்.

வீடியோ பதிவு

அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள் நம் முன்னோர்கள். அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட்டார்கள் தெரியுமா ?

kaliman pillayar

ஈரக்களிமண்ணானது நீரிலே சீக்கிரம் கரைந்து ஆற்று நீரின் வேகத்தோடு சென்று விடும். அனால் சற்று காய்ந்த களிமண்ணோ அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும்.

kaliman pillayar

அதனால் நண்பர்களே உங்களால் முடிந்தவரை எந்த ஓரு ரசாயனத்தையும் கலக்காமல் களிமண்ணால் மட்டுமே விநாயகர் சிலையை செய்து அதை ஆற்றில் கரைக்க முயற்சி செய்யுங்கள்… நமது முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் ஆன்மிகத்தோடு அறிவியலும் கலந்திருக்கும். அதை நாம் உணர்ந்து அவர்கள் வழி நடப்போம்.