கோயிலிற்கு பெண்கள் ஏன் நகை அணிந்து செல்லவேண்டும் – அறிவியல் உண்மை

woman-with-gold
- Advertisement -

பொதுவாக நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல்லாயிரம் அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் கோயிலிற்கு செல்லும்போது பெண்களை நகை அணிந்து செல்லும்படி கூறியதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

bogar-sidhar

பொதுவாக கோவிலில் நேர்மறை ஆற்றலானது பரவிக்கிடக்கும். அதிலும் கருவறையில் உள்ள வாயில் வழியாக வரும் நேர்மறை ஆற்றலின் சக்தி அளப்பரியது. இந்த சக்தி நம் உடலின்மீது பட்ட மாத்திரத்தில் அது நம் உடல் முழுவதும் பரவ ஆரமிக்கும். இதனாலேயே ஆண்கள் சட்டை இன்றி கோயிலிற்கு செல்லவேண்டும் என்று பெரியோர்கள் கூறினர்.

- Advertisement -

பெண்களுக்கு மேலாடை மிக முக்கியம் என்பதால் ஆண்களைப்போல் அல்லாமல் பெண்களை நிறைய தங்க நகை அணிந்துகொண்டு கோயிலிற்கு செல்ல சொன்னார்கள். தங்க நகைக்கு கோவிலில் இருந்து வெளிப்பாடு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி அதிகம் இருப்பதனால், பெண்கள் அதை அணிந்து செல்வதன் மூலம், தங்கநகையானது நேர்மறை ஆற்றலை கிரகித்து அதை பெண்களின் உடலில் ஊடுருவச்செய்யும்.

gold

இதேபோல கோவிலிற்குள் செருப்பு போட்டுகொண்டு செல்லக்கூடாது என்பதற்கு பின்னும் அறிவியல் இருக்கிறது. இதற்கு காரணம் கோவிலில் இருக்கும் நேர்மறை ஆற்றல்கள் பாதம் வழியாக நமது உடலில் ஊடுருவ வாய்ப்புகள் அதிகம். நாம் செருப்பு அணிந்து சென்றால் இது தடைபடும்.

- Advertisement -

padmanabha-swamy temple

இதையும் படிக்கலாமே:
எந்த தேதியில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்துகொள்வது நல்லது தெரியுமா ?

இப்படி நம் கோவில்களில் உள்ள மணியோசை, ஆரத்தி, மலர் அர்ச்சனை என அனைத்திற்கும் பின்பும் ஒரு மிகப்பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒவ்வொரு பழக்கத்திற்கு பின்பும் ஒரு அறிவியல் இருக்கிறது என்பதற்கு கோவில்களில் கடைபிடிக்கப்படும் நடைமுறையே ஒரு மிக சிறந்த உதாரணம்.

- Advertisement -