என்ன பிளேயர். என்னை போன்று ஒரு வீரர் என்றால் அது இந்த நியூஸி வீரர் – கோலி ஓபன் டாக் தான்

virat-kohli

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இவ்விரு நியூசிலாந்தில் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியர் நகரில் துவங்குகிறது.

ind vs nz

இதற்காக இரு அணிவீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தொடர்களாக இந்திய அணி எதிர்அணிகளுக்கு கடும் சவாலை அளிக்கும் வகையில் விளையாடி வெற்றிகளை குவித்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளதால் இந்த தொடர் இரு அணிக்கும் முக்கியமான ஒரு தொடராக அமையஉள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது : இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாகும். நியூசிலாந்து அணியையும் குறைவாக மதிப்பிட முடியாது. இன்றைய தேதியில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் கண்டிப்பா வில்லியம்சனும் இடம்பெறுவார்.

kane

மேலும்,அவரது ஆட்டத்தினை கண்டு நானும் ரசித்திருக்கிறேன். அவரது பேட்டிங் ஸ்டைல் எனக்கு பிடித்தமான ஒன்று வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார். நான் எவ்வாறு இந்திய அணிக்காக ஆடுகிறேனோ அதேபோல் வில்லியம்சன் அவரது அணிக்காக ஆடிவருகிறார். இது ஒரு பலமான போட்டியே ஆகும் என்று கோலி தனது கருத்தினை தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

76 பந்துகள் 16பவுண்டரி 10சிக்ஸர் 172ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் – சிறந்த டி20 வீரர் ஐ.சி.சி அறிவிப்பு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்