போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறவும் தன லாபம் பெறவும் செய்யும் தாந்தரீக பரிகாரம்

மனிதர்களின் உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தர பல வகையான விளையாட்டுகள் இருக்கின்றன. இதில் பலருக்கும் பணம், பொருள் போன்றவற்றை பணயம் வைத்து ஆடப்படும் சூதாட்டங்களில் மிகுந்த விருப்பம் இருக்கிறது. எத்தகைய சூதாட்டங்களையும் நமது வேத நூல்களும், ஆன்மீக பெரியோர்களும் அங்கீகரிப்பதில்லை. ஆனாலும் இத்தகைய ஆட்டங்களில் ஈடுபடும் சிலர் தங்களின் பணம், பொருள் போன்றவற்றை இழக்காமல் இருந்து, இத்தகைய போட்டிகளில் வெற்றி பெற்று பொருள் வரவை பெறுவதற்கும் ஒரு தாந்திரீக முறை கூறப்பட்டுள்ளது அதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Gambling-2

நமது கலாச்சாரங்களில் பணம், பொருள் போன்றவற்றை பணயமாக வைத்து ஆடப்படும் ஆட்டங்கள் அனைத்தும் ஒரு பாவத்திற்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்களிடம் தங்களின் நாடு, சொத்து, சுகம் போன்ற அனைத்தையும் இழந்து “மகாபாரத போர்” உருவானதற்கு காரணமே இந்த சூதாட்டம் தான். இந்த சூதாட்டங்களில் மக்கள் யாரும் ஈடுபடுவதை சித்தர்கள் ஊக்கப்படுத்துவதில்லை என்றாலும், அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைத்து “தனலாபம்” உண்டாவதற்கு ஒரு தாந்த்ரீக பரிகார முறையை கூறியிருக்கின்றனர் அது என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

பழங்காலங்களில் நமது நாட்டில் தாயம் விளையாட்டில் பணம், பொருள் போன்றவற்றை பணயமாக வைத்து விளையாடும் சூதாட்ட விளையாட்டுகளே அதிகம் இருந்தன. ஆனால் காலங்கள் பல கடந்து தற்போதைய நவீன காலங்களில் “சீட்டாட்டம், குதிரை பந்தயம், லாட்டரி, கேசினோ” போன்ற பலவகையான பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் தோன்றியிருக்கின்றன.

மேற்சொன்ன விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடுவதற்கு முன்பு மிருகசீரிட நட்சத்திர தினத்தன்று, புளிய மரத்தில் வளர்ந்திருக்கும் புல்லுருவி செடிக்கு காப்பு கட்டி, தீபாராதனை காட்டி, அச்செடியினை பறித்து, ஒரு மஞ்சள் நிற நூலில் கட்டி, உங்களின் வலது கையில் காப்பு கட்டிக்கொண்டு “சீட்டாட்டம், பந்தயம், லாட்டரி” போன்றவற்றில் ஈடுபடும் போது நீங்கள் அவற்றில் வெற்றி பெற்று மிகுந்த தன லாபத்தை பெறும் அதிர்ஷ்டம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
அதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்யும் விண்ட் சைம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Winning games in Tamil.