பனிக்காலத்தில் கிளியர் & ஸ்மூத் சருமம் பெற 10 பைசா செலவில்லாமல் வீட்டில் இருந்தே 10 நிமிஷம் இதை செஞ்சு பாருங்க!

banana-face-pack
- Advertisement -

ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றார் போல நம்முடைய சருமமானது அதன் தன்மையிலிருந்து மாறுபடுகிறது. வெயில் காலத்தில் ஈரப்பதம் இல்லாமல் வறண்ட சருமமும், பனிக்காலத்தில் அதிக ஈரப்பதத்துடன் டேமேஜ் அண்ட் நமச்சல் சருமமும் சிலருக்கு இருக்கும். இந்த நிலையிலிருந்து நம்முடைய சருமத்தை ரொம்பவே சுலபமாக பராமரித்து கிளியர் அண்ட் ஸ்மூத்தாக எப்படி பொழிவுற செய்வது? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பனிக்கால பராமரிப்பு ரொம்ப எளிமையான முறை தான்! பனிக்காலத்தில் சருமத்தில் அதிக ஈரப்பதம் தங்கி இருக்கும். குறிப்பாக எண்ணெய் சருமம் கொண்டவர்கள் பனிக்காலத்தில் ரொம்பவே சிரமப்பட வேண்டி இருக்கும். பாக்டீரியாக்கள், பங்கஸ் போன்ற கிருமிகளை எளிதாக ஈர்க்கக் கூடிய இந்த பணிக்காலத்தில் நம்முடைய சருமத்தை ரொம்பவே எளிதாக பராமரிப்பது எப்படி?

- Advertisement -

பனிக்காலத்தில் ஒரு விதமான ஒவ்வாமை நம் சருமத்திற்கு ஏற்படுவது உண்டு. இது சில சமயங்களில் முகத்தில் நமச்சலையும் ஏற்படுத்தும். இந்த அரிப்பு நீங்கி முகத்தை ரொம்பவே ஸ்மூத்தாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய ஒரு பொருள் தான் வாழைப்பழம்! வாழைப்பழம் பயன்படுத்துபவர்கள் முகப்பரு இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அதிக அளவு முகப்பரு இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

இப்பொழுது ஒரு கனிந்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஓட்ஸ் பவுடர் சேர்க்க வேண்டும். உங்களிடம் இருக்கும் ஓட்ஸை நன்கு பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அவ்வப்பொழுது நீங்கள் ஃபேஸ் பேக் போடுவதற்கு உதவியாக இருக்கும். ஓட்ஸ் சேர்த்த பின்பு ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். மலை தேன் சேர்ப்பது இன்னும் சிறப்பு. பின்னர் மிக்ஸியை இயக்கி ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளுங்கள். இது ஸ்மூத்தி போல பேஸ்ட் ஆக உங்களுக்கு கிடைக்கும். இந்த பேஸ்ட்டை நீங்கள் முகம், கழுத்து, கை, கால் போன்ற எல்லா பகுதிகளிலும் நீங்கள் தடவிக் கொள்ளலாம்.

- Advertisement -

20 நிமிடங்கள் நன்கு ஊற விட்டு விடுங்கள். முகப்பரு அதிகம் இருப்பவர்கள் இதில் வாழைப்பழத்தை தவிர்த்து ஓட்ஸ் பவுடர் மற்றும் தேன் மட்டும் கலந்து பயன்படுத்த வேண்டும். 20 நிமிடம் நன்கு ஊறி உலர்ந்த பின்பு முகத்தை சாதாரணமான தண்ணீரால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முகத்தை துடைக்கும் பொழுது ரொம்பவும் அழுத்தி தேய்க்க கூடாது. முகத்தை துடைப்பவர்கள் எப்பொழுதும் ஒரு கடினமான டவல் கொண்டு மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். அப்பொழுது தான் சருமம் டேமேஜ் இல்லாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஜெல்லை பயன்படுத்துபவருக்கு இனி முன் நெற்றியில் வழுக்கை விழாது, அதற்கு பதிலாக புதிய முடிகள் தான் அழகாக சுருண்டு விழும்.

இதுபோல வாரம் ரெண்டு முறை கண்டிப்பாக நீங்கள் செய்து பாருங்கள், உங்களுடைய முகம் பனிக்காலத்திலும் பளிச்சென மின்னும். கொஞ்சம் கூட பாதிப்புகள் இல்லாமல், மாசு மருக்கள் இன்றி, பட்டுப் போல தக தகவென தங்கமாக மின்னும். பனிக்காலத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ள வேண்டும். கைகளை முகத்திற்கு அருகில் கொண்டு செல்லும் பொழுதே நீங்கள் எச்சரிக்கையாக பின் வாங்கி விட வேண்டும். எப்பொழுதும் கைகளை கழுவி விட்டு தான் முகத்தை தொட வேண்டும். இந்த ஒரு டிப்ஸை பயன்படுத்தினாலே பனிக்காலத்தில் நாம் சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

- Advertisement -