நான்கு நாட்கள் ஆனாலும் சாப்பிட்ட சுவை நாவை விட்டு மறவாது. அப்படி சுவையான வெள்ளை குருமாவை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்

white-kuruma
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவற்றிற்கு தனித்தனியாக சைட் டிஷ்கள் செய்து கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இவை அனைத்திற்கும் ஏற்ற ஒரு சைடிஷ் என்றால் அது குருமா மட்டும் தான். இந்த குருமாவை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும் அவ்வளவு சுவையாக இருக்கும். தக்காளி குருமா, காய்கறி குருமா, வெள்ளை குருமா என பலவிதமான வகையில் இந்த குருமாவை சுவையாக செய்ய முடியும். அப்படி அனைத்து உணவுகளுடன் சேர்த்து சாப்பிட சுவையான குருமாவை குக்கரில் ஒரு விசில் வைத்து செய்தாலே போதும் சட்டென தயாராகிவிடும். இந்த குருமா ஹோட்டலில் செய்யும் அதே சுவையில் மிகவும் அற்புதமாக இருக்கும். வாருங்கள் இப்படி சுவையான குருமாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கேரட் – 2, பீன்ஸ் – 10, பச்சை பட்டாணி – 50 கிராம், உருளைக்கிழங்கு கிழங்கு – 2, வெங்காயம் – 3, தக்காளி – 2, தேங்காய் – கால் மூடி, முந்திரிப்பருப்பு – 10, சோம்பு – ஒன்றரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 2, பூண்டு – 6 பல், பட்டை – 2, கிராம்பு – 3, கல்பாசி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, வரமிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கசகசா – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு குக்கரில் நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, குக்கரை மூடி விசில் போட்டு, அடுப்பின் மீது வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கசகசா, முந்திரிப் பருப்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, கல்பாசி, மிளகாய் தூள் இவை அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை அதனுடன் சேர்த்து, மீதமுள்ள உப்பையும் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் இதனை அடுப்பின் மீது வைத்து கொதிக்க விடவேண்டும்.

பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குருமாவுடன் சேர்த்து கலந்து விடவேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்க்க வேண்டும்.

- Advertisement -