சமையலறையில் இந்த விஷயங்களையும் கொஞ்சம் கவனியுங்க. கிச்சனில், ரொம்பவும் பழசாக இருக்கும் மரச்சாமனை புதுசு போல மாற்ற இந்த ஒரு ஐடியா போதுமே.

wooden-spoon
- Advertisement -

சமையலறையில் நாம் ரொம்ப நாட்களாக சில விஷயங்களை கவனிக்க மாட்டோம். அந்த வரிசையில் நாம் பயன்படுத்தும் மரக்கரண்டி, மரத்தில் இருக்கும் வெஜிடபிள் சாப்பிங் போர்ட், இவைகளை பராமரிக்க ஒரு எளிமையான வீட்டுக் குறிப்பையும், இதோடு சேர்த்து சில்வர் சிங்க், சில்வர் பாத்திரம், சில்வர் கேட், சில்வர் தாழ்ப்பால் இவைகளை கை வலிக்காமல் சுத்தம் செய்ய எளிமையான ஒரு வீட்டு குறிப்பையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதிக செலவு இல்லாமல், அதிக நேரம் எடுக்காமல், இந்த எளிமையான வீட்டு குறிப்புகளை பின்பற்றி பாருங்கள். இல்லத்தரசிகளுக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

சமையலறையில் இருக்கும் மரச்சாமான் பராமரிப்பு:
பொதுவாகவே நம்முடைய வீடுகளில் மரக் கரண்டி பயன்படுத்தும் வழக்கம் இருக்கும். மரத்தில் காய்கறிகள் நறுக்க கட்டை வைத்திருப்போம். மரத்தில் சில பேர் சப்பாத்தி தேக்க பலகை வைத்திருப்பார்கள். இப்படி மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை சரியாக பராமரிக்கவில்லை என்றால், சில சமயம் அதில் பூசனம் பிடித்து, கருப்பு பிடித்துக் கொள்ளும். பிறகு அந்த மரச்சாமான்களை பயன்படுத்துவதில் சிரமம் இருக்கும்.

- Advertisement -

முதலில் மர சாமான்களை தேய்த்து சுத்தமாக கழுவிய பிறகு, அதை வெயிலில் வைத்து காய வைத்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஈரம் இல்லாமல் ஒரு காட்டன் துண்டை வைத்து துடைத்து விடுங்கள். ஈரம் போக ஃபேன் காற்றில் வைத்துக் கூட 15 நிமிடங்கள் ஆரவைத்து விட வேண்டும்.

அதன் பின்பு கொஞ்சமாக தேங்காய் எண்ணெயோ அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் வேறு ஏதாவது எண்ணெயாக இருந்தாலும் சரி, அதை எடுத்து இந்த மரச்சாமானின் மேல் தடவி அப்படியே ஆரவிட்டு விடுங்கள். ஒரு சில மணி நேரத்திற்குள் அந்த எண்ணெயை மரச்சாமான்கள் முழுவதுமாக உறிஞ்சி விடும். அதன் பின்பு எடுத்து அலமாரியில் வைத்து விடலாம். எப்போதும் போல சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்தால் மரச்சாமான்களில் கருப்பு பிடிக்காது. பூசனம் பிடிக்காது. நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெஜிடபிள் நறுக்குவதற்கு வைத்திருக்கும் மரப்பலகையை வாரம் ஒரு முறையாவது நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் வினிகர் 2 மூடி, ஆப்ப சோடா 1 ஸ்பூன், போட்டு நன்றாக கலந்து, இந்த லிக்விடை காய்கறி நறுக்கும் மரப்பலகை மீது நன்றாக தடவி, 15 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். அதன் பின்பு எலுமிச்சம்பழத் தோல் இருந்தால் அதை வைத்து நன்றாக தேய்த்துக் கொடுக்க வேண்டும்.

எலுமிச்ச பழச்சாறு இதன் மேலே பிழிந்து தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதன் பிறகு லேசாக தண்ணீர் தெளித்து ஸ்டீல் நாரை வைத்து தேய்த்தால் அந்த பலகையில் இருக்கும் அழுக்கு, பாசி ஒட்டுமொத்தமாக வெளியேறிவிடும். தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு வெயிலில் காய வைத்து, இதன் மேலும் எண்ணெய் தடவி வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் உங்களுடைய மரப்பலகை சூப்பராக தயார்.

- Advertisement -

ஸ்டீல் சிங்க் சுத்தம் செய்ய எளிமையான குறிப்பு:
எவர்சில்வரில் இருக்கும் சிங்கை சுத்தம் செய்ய 2 ஸ்பூன் விபூதி இருந்தால் போதும். பூஜைக்கு பயன்படுத்தாத விபூதியை சமையலறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஸ்டீல் சிங்குக்கு மேலே இந்த விபூதியை தூவி, நன்றாக தேய்த்து, நல்ல தண்ணீரை ஊற்றி கழுவி விட்டால் சிங்க் உடனடியாக பளபளப்பாக மாறிவிடும். திட்டுத்திட்டதாக வெள்ளை கறைகள் கூட இருக்காது.

இதேபோலத்தான் ஸ்டீல் குழாய்களைக் கூட விபூதியை வைத்து சுலபமாக சுத்தம் செய்து விடலாம். உங்கள் வீட்டில் மிகவும் பழசான மங்கிப்போன எவர்சில்வர் பாத்திரத்தை கூட விபூதியை பூசி தேய்த்து சுத்தம் செய்து பாருங்கள். நொடி பொழுதில் பளபளப்பாக மாறும்.

இதையும் படிக்கலாமே: கேரளத்து மண்வாசனை மாறாத கடலை கறி இப்படித்தான் செய்யணும். கேரளாவுக்கே போய் ஆப்பத்தோடு, கடலை கறி சாப்பிட்ட திருப்தி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

சில பேர் வீட்டில் வீட்டின் முன் வாசலில் எவர்சில்வரில் கேட் இருக்கும். அந்த கேட்டை சுத்தம் செய்வது அவ்வளவு எளிது அல்ல. ஆனால் அதில் கொஞ்சம் விபூதியை தூவி ஒரு துணியை வைத்து, தண்ணீர் கூட ஊற்றாமல் துடைத்து எடுத்து பாருங்கள். எவர்சில்வர் கேட் கஷ்டப்படாமல் சுத்தமாகிவிடும். மேலே சொன்ன இந்த எளிமையான வீட்டு குறிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக ஒரு குறிப்பாவது உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும்.

- Advertisement -