குழந்தைகள் விரும்பி சாப்பிட இந்த பன்னீர் பட்டர் மசாலாவை இப்படி செய்து கொடுத்து பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள்

panneer
- Advertisement -

பன்னீர் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, நான், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம்.  பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலா வில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பன்னீர் பட்டர் மசாலாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம், வெண்ணெய் – 3 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சிறிய துண்டு பட்டை – 1, ஏலக்காய் – 3, லவங்கம் _ 3, பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன், மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் – 1/2  ஸ்பூன், மல்லித்தூள் – 1ஸ்பூன், கரம் மசாலா– 1/2  ஸ்பூன், பெரிய தக்காளி – 1, சர்க்கரை – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2  ஸ்பூன், கஸ்தூரி மேத்தி – 1  ஸ்பூன், உப்பு – 1ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு , முந்திரி பருப்பு – 5, கசகசா – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். வெண்ணெய் உருகியதும் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும். சீரகம் பொரிந்த பிறகு ஒரு சிறிய துண்டு பட்டை, 3 ஏலக்காய், மற்றும் 3 லவங்கம் சேர்த்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.நன்கு வதங்கிய பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

- Advertisement -

ஒரு தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.ஓரளவு வதங்கிய பின்னர் மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்துக் கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் முந்திரிப்பருப்பு மற்றும் அரைத் ஸ்பூன் கசகசா சேர்த்துக் கொள்ளவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்முந்திரிபருப்பு விழுதை பன்னீர் கிரேவியில் சேர்த்து கலக்கவும். நன்கு கலந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் ஒருமுறை கிளறி ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கொள்ளவும். மூடி வைத்து இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான பன்னீர் கிரேவி தயாராகிவிடும்.குழந்தைகள் விரும்பி சாப்பிட இந்த பன்னீர் பட்டர் மசாலாவை இப்படி செய்து கொடுத்து பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள்

- Advertisement -