உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்விக்க இந்த ஒரு ஸவீட்டை மட்டும் செய்து கொடுங்கள் போதும். உங்கள் மீது கோபம் உள்ளவர்கள் கூட இருக்கின்ற கோபத்தை மறந்து விடுவார்கள்

mal-mal-poori
- Advertisement -

கோதுமை மாவில் பலவிதமான இனிப்பு பலகாரங்களும், கார பலகாரங்களின் செய்யப்படுகின்றன. கோதுமை மாவில் கார கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை, கார கஜடா, இனிப்பு கஜடா, கார தோசை, இனிப்பு தோசை, கார சப்பாத்தி, இனிப்பு சப்பாத்தி என அனைத்துமே காரம், இனிப்பு என இரண்டு வகைகளிலும் செய்யப்படுகிறது. அதுபோலத் தான் நாம் உண்ணும் பூரியை எப்போதும் நான் மசாலாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுள்ளோம். ஆனால் இப்போது செய்யப் போகின்ற பூரி மிகவும் இனிப்பு சுவையுடன் அற்புதமாக இருக்கும். இதனை உங்கள் வீட்டில் விசேஷ நாட்களில் பந்தியில் வைக்கும் பொழுது இது மிகவும் ரிச்சான ஒரு ஸ்வீட் ரெசிபியாக இருக்கும். இதனை கடைகளில் சென்று வாங்கினாலும் இந்த அளவிற்கு சுவையாக கிடைக்காது. வாருங்கள் இந்த மல்மல் பூரியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – கால் கிலோ, பொட்டுக்கடலை – 150 கிராம், தேங்காய் – கால் மூடி, எண்ணெய் கால் லிட்டர், ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன், நாட்டுச்சக்கரை – 100 கிராம், சர்க்கரை – ஒரு கப், உப்பு – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் வெது வெதுப்பான தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை பத்திலிருந்து இருபது நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 150 கிராம் பொட்டுக்கடலை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் கால் மூடி தேங்காயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து, மூடி போட்டு மூடி, கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை மற்றொரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பேன் வைத்து, அதில் ஒரு கப் சர்க்கரை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். சர்க்கரை நன்றாகக் கரைந்து ஒரு கம்பி பதம் வரும் வரை இதனை கொதிக்க விடவேண்டும். பிறகு ஒரு கம்பிப் பதம் வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டையாக எடுத்து, பூரி செய்ய மாவு திரட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் சேர்த்து பொறிக்க வேண்டும். பிறகு பொரித்த பூரியை சர்க்கரைப் பாகில் நன்றாக நனைத்து, அதனை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். பிறகு இதன் நடுவே கலந்து வைத்துள்ள பொட்டுக்கடலை பொடியை ஒரு ஸ்பூன் வைத்து, பூரியை இரண்டாக மடித்து ஒரு லவங்கப் பட்டையை சொருகி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மல்லல் பூரி தயாராகிவிட்டது.

- Advertisement -