தினமும் செய்யும் பொட்டுக்கடலை சட்னியை இப்படி டேஸ்ட்டாக ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். 10 இட்லி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

chutni
- Advertisement -

ஒவ்வொருவர் வீட்டிலும் தினமும் ஒரு வேளையாவது இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த பொட்டுக்கடலை சட்னி அரைக்காமல் இருப்பதில்லை. ஏனென்றால் இதனை செய்வது மிகவும் சுலபமான விஷயம் தான். இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் இந்த சட்னியை செய்து கொடுக்கின்றனர். ஒரு சிலர் புளி சேர்த்து செய்வார்கள், ஒரு சிலர் புளி சேர்க்க மாட்டார்கள். அதேபோல் ஒரு சில வீடுகளில் பச்சை மிளகாய் சேர்க்காமல் வரமிளகாய் மட்டும் சேர்த்து சட்னி செய்வார்கள். இப்படி ஒவ்வொருவரின் சுவைக்கு ஏற்ப இதில் சேர்க்கப்படும் பொருட்கள் மாறுபடுகின்றன. அவ்வாறு அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான பொட்டுக்கடலை சட்னியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை – 100 கிராம், பச்சைமிளகாய் – 5, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – ஒரு பல், தேங்காய் – அரைமூடி, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயைத் தேங்காய் துருவலில் வைத்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும் பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைக்கவேண்டும் 100 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின்னர் பூண்டு, இஞ்சி இவற்றையும் சேர்த்து வறுக்க வேண்டும்.

பிறகு இவற்றுடன் பச்சை மிளகாய் மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் இவற்றையும் சேர்த்து லேசாக ஒரு முறை வதக்கி விட வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து விட வேண்டும். பிறகு இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி, இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் சேர்த்து கலத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான பொட்டுக்கடலை சட்னி தயாராகிவிட்டது. இதனுடன் சுடச்சுட இட்லி செய்து பரிமாறி கொடுத்தால் போதும். தின்ன தின்ன திகட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -