எலி வால் போல இருக்கும் உங்கள் கூந்தலை குதிரை வால் போல புசுபுசுவென்று ஆக்குவதற்கு ஈஸ்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!

hair-yeast
- Advertisement -

கலியுகத்தில் தலைவிரித்தாடும் இந்த தலைமுடி உதிர்தல் பிரச்சனை ஆண்களுக்கு மட்டும் அல்லாமல், பெண்களுக்கும் நிறையவே உண்டு. ஆண்களுக்கு சொட்டை விழுவது பிரச்சனை என்றால், பெண்களுக்கு எலி வால் போல முடி மாறுவதும் பிரச்சனையாக இருக்கிறது. இப்படி அடர்த்தி குறைந்த கூந்தலை கொண்டவர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுக்கும் சக்தி ஈஸ்ட்-க்கு உண்டு. அதை எப்படிப் பயன்படுத்தலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முடி வளர்ச்சியை தூண்டும் வகையிலான தன்மை ஈஸ்டிற்கு உண்டு. இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை மிக விரைவாக தூண்டுகிறது. அது மட்டுமல்லாமல் ஈஸ்டில் இருக்கும் ஃபோலிக் அமிலம் வேகமாக முடி வளரவும் தூண்டி விடுகிறது. இதனால் வேர் கால்களுக்கு ரத்த ஓட்டம் கிடைத்து, இறந்த செல்கள் தலையை விட்டு நீங்கி, முடி உதிர்தல் வேகமாக கட்டுப்பட்டு, புதிதாக முடி வளர தொடங்கும்.

- Advertisement -

நீளம் குறைவான முடிக்கு ஈஸ்டை இப்படி பயன்படுத்துங்கள். 2 பங்கு தேன், ஒரு பங்கு ஈஸ்ட் இந்த இரண்டையும் நன்கு ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கலந்து தலை முடியின் வேர் கால்களுக்கு மசாஜ் செய்து கொடுங்கள். இதை நீங்கள் கலந்தவுடன் பயன்படுத்திவிட வேண்டும். 15 நிமிடம் ஊற வைத்து பின் தலை முடியை எப்போதும் போல நார்மல் ஷாம்பூ போட்டு அலசி விடுங்கள். வாரம் 2 முறை இப்படி செய்ய முடிக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து நீளமாக வளரும்.

வலிமையற்ற கூந்தலுக்கு ஈஸ்டை இப்படி பயன்படுத்துங்கள். முட்டையின் மஞ்சள் கருவுடன், ஈஸ்ட் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் அளவிற்கு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து க்ரீம் போல நன்கு பீட் செய்து கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்த பின்பு இந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு பீட் செய்து தலைமுடி முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். 20 நிமிடம் உலரவிட்டு வாரம் இரண்டு நாட்கள் பின் இப்படி தலையை அலசினால் வலிமையற்ற கூந்தல் வலுபெறும்.

- Advertisement -

அடர்த்தியான சொட்டை தலையில் முடியை வேகமாக வளர செய்ய ஈஸ்டை இப்படி பயன்படுத்துங்கள். ஒரு டீ ஸ்பூன் ஈஸ்ட்டுடன், 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள். கற்றாழை ஜெல் இயற்கையானதாக இருக்க வேண்டும், எனவே நீங்கள் அதன் மேல் தோலை சீவி, உள்ளிருக்கும் ஜெல்லை கூழ் போல ஆக்கி கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் 2 டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இது எல்லாவற்றையும் 10 நிமிடம் நன்கு பீட் செய்தால் கிரீம் போல மாறிவிடும். இந்த கிரீமை தலை முழுவதும் தடவி இருபது நிமிடம் உலரவிட்டு அலசினால் முடி நன்கு புசுபுசுவென்று குதிரை வால் போல வேகமாக அடர்த்தியாக வளரத் துவங்கும். இனி உங்கள் கூந்தலை யாரும் எலி வால் என்று சொல்லமாட்டார்கள்.

- Advertisement -