ஏகாதசி வழிபாட்டு பலன்கள்.

perumal
- Advertisement -

பௌர்ணமி முதல் அமாவாசை வரை இருக்கக்கூடிய திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் அமாவாசை முதல் பௌர்ணமி வரை இருக்கக்கூடிய திதிகள் வளர்பிறை திதிகள் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு திதிகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபட்டால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வருடம் முழுவதும் ஏகாதேசி விரதம் இருந்தால் ஏற்படக்கூடிய பலன்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஏகாதசி என்பது பெருமாளுக்கு உரிய தினமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசிகளுக்கு என்று பலன்கள் வேறுபடும். பெருமாளின் பரிபூரணமான அருளை பெறுவதற்காக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இந்த தகவலை தெரிந்துகொண்டு இருந்தால் மேலும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும்.

- Advertisement -

சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசியை காமாதா என்போம். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்தால் அவர்களுடைய கணவன்மார்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். தேய்பிறை ஏகாதசியை பாப மோகினி என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசியை மோகினி என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் முக்தி கிடைக்கும். தேய்பிறை ஏகாதசியை வருத்தம் என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் குறையில்லாத செல்வ செழிப்பு ஏற்படும்.

ஆனி மாத வளர்பிறை ஏகாதசியை நிர்ஜலா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். தேய்பிறை ஏகாதசியை அபரா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். ஆடி மாத வளர்பிறை ஏகாதசியை ஸையனி என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நம்முடைய கோவம், ஆணவம் அனைத்தும் ஒழியும். தேய்பிறை ஏகாதசியை யோகினி என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நமக்கு ஏற்படக்கூடிய கொடிய நோய்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியை புத்ராஜா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். தேய்பிறை ஏகாதசியை காமிகா என்போம். அன்றைய தினம் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்தால் மோட்சம் கிடைக்கும். புரட்டாசி மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை பத்மநாபா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் செல்வ செழிப்புகள் அனைத்தும் குறைவில்லாமல் கிடைக்கும். தேய்பிறை ஏகாதசியை அஜா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும்.

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசியை பாபாங்குசா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் செல்வ செழிப்பு மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவோம். தேய்பிறை ஏகாதசியை இந்திரா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நம்முடைய முன்னோர்கள் நற்கதி அடைவார்கள். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை பிரபோதினி என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் மேலோகத்தில் நற்கதி கிடைக்கும். தேய்பிறை ஏகாதசியை ரமா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நிலையான இன்ப வாழ்க்கை கிடைக்கும்.

- Advertisement -

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை வைகுண்டா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் மகாவிஷ்ணுவின் அருளும் மோட்சமும் கிடைக்கும். தேய்பிறை ஏகாதசியை உத்பத்தி என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும். தை மாத வளர்பிறை ஏகாதசியை புத்ரதா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நல்ல ஒழுக்கமான சிறந்த குழந்தை கிடைக்கும். தேய்பிறை ஏகாதசியை பைலா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் பாவம் நீங்கும்.

மாசி மாத வளர்பிறை ஏகாதசியை ஜெயா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தேய்பிறை ஏகாதசியை சப்திலா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமைகள் அனைத்தும் நீங்கும். பங்குனி மாத வளர்பிறை ஏகாதசியை ஆமாலாக்கி என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். தேய்பிறை ஏகாதசியை விஜயா என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் வெற்றி வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை நீக்கும் திலகம்

ஏகாதசி விரதம் என்றதும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதேசி அன்று மட்டும் விரதம் இருக்காமல் நம்முடைய தேவைக்கேற்றவாறு விரதமிருந்து பலன்களை அடைவோம்.

- Advertisement -