இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் இந்த இருவர் உலகக்கோப்பை தொடரில் டெத் ஓவர்களை வீசி எதிர்அணியை நிச்சயம் கட்டுப்படுத்துவார்கள் – ஜாகீர் கான்

zaheer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வென்று முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

mohammed-shami

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் கோலி 45 ரன்களை குவித்தார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் (1-0)என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் பௌலிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என இருதரப்பினரும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இது உலகக்கோப்பை தொடருக்கு ஆரோக்கியமான ஒன்றாகும்.

bumrah

பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் நிச்சயம் டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர்கள். எனவே, அவர்கள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசி எதிரணியை திணறடிப்பார்கள். மேலும், ஷமி துவக்க ஓவர்களை வீசுவது நல்லது. சுழற்பந்து வீச்சாளர்கள் நடுவரிசை ஓவர்களை தற்போதுவரை தரமாக வீசி வருகிறார்கள் எனவே, இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜாகீர் கான் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இனியாவது ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் . ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோருடைய தடையை விலக்கி கொள்கிறோம் – பி.சி.சி.ஐ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -