இழந்த பணம் நகை சொத்து திரும்ப பெற வழிபாடு

sivan sandikeshwarar
- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் ஒரு ரூபாய் சம்பாதிக்கவே பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அப்படி பாடுபட்டு சம்பாதித்த பணமோ நகையோ சொத்தோ சிலரின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு கைவிட்டுப் போனால் எத்தனை வேதனைக்குரிய விஷயம். இன்றைய காலக்கட்டத்தில் இது போன்ற அவல நிலைகளை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். நம்மை இப்படி ஏமாற்றுபவர்கள், நிச்சயமாக யாரோ ஒருவராக இருக்க மாட்டார்கள்.

நம்மில் ஒருவராகவும் நமக்கு நெருக்கமானவர்கள் தான் இத்தகைய இழிசெயல்களை செய்வார்கள். இவர்களை தண்டிக்கவும் முடியாமல் நாம் வேறு என்ன செய்வதென்று தெரியாமல் திணறும் வேளையில் தெய்வத்தை சரணடைவதை தவிர வேறு வழி கிடையாது. அப்படி சரணாகதி அடையக்கூடிய தெய்வத்தைப் பற்றி ஆன்மீகம் தான் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இழந்தவற்றை திரும்பப் பெற

பெரும்பாலும் அனைவரும் சிவாலயத்திற்கு செல்லும் போது சிவபெருமானை வணங்குவோம், நந்தீஸ்வரரை வணங்குவோம் இவர்களை வணங்கிய பிறகு மற்றவர்களையும் ஒரு முறை வணங்கிய பின்பு வீட்டிற்கு சென்று விடுவோம். ஆனால் சிவாலயம் சென்றால் நாம் முக்கியமாக வழிபட வேண்டியவர் சண்டிகேஸ்வரர்.

இந்த சண்டிகேஸ்வர சிவபெருமானின் காப்பாளர். ஆகையால் தான் அனைத்து சிவாலயத்திலேயும் சண்டிகேஸ்வரர் நிச்சயம் இருப்பார். அதாவது சிவாலயத்திற்கு வருபவர்கள் சிவனுடைய சொத்து ஏதேனும் எடுத்து செல்கிறார்களா என்று பார்க்கக்கூடிய காவல் தெய்வமாகவும் இவர் இருக்கிறார்.

- Advertisement -

பொதுவாகவே சிவன் சொத்து குலநாசம் என்று சொல்வார்கள் அத்தகைய சிவன் சொத்தை களவாடாமல் காக்கக்கூடிய தெய்வம் தான் இந்த சண்டிகேஸ்வரர். ஆகையால் தான் சிவபெருமானை தரிசித்து விட்டு அவரை சுற்றி வரும் போது சண்டிகேஸ்வரர் முன்பு நம்முடைய இரு கையும் விரித்து ஒன்றுமில்லை என்று காட்ட வேண்டும் என்று சொல்லுவார்கள்.

நாளடைவில் அனைவரும் சண்டிகேஸ்வரர் முன்பு நின்று கைகளை தட்டி அவர் காது கேளாதவர் ஆகையால் கைகளை தட்டி வேண்டுதலை சொல்கிறோம் என்று அவருக்கான மரபை மாற்றி விட்டோம். இவரை பிரதமை மற்றும் நவமி திதிகளில் வழிபாடு செய்வது உகந்ததாகும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி புதன்கிழமைகளில் இவரை வணங்கிட தொலைந்த பொருள்கள் கூட மீண்டும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. சிவபெருமானின் பிரதிநிதியான இவருக்கு வில்வ இலை கொண்டு வழிபாடு செய்தால் நாம் இழந்தவை திரும்பப் பெறுவதுடன் வாழ்வும் வளம் பெறும்.

இப்படி சிவனை எந்நேரமும் சிந்தையில் வைத்து சிவனுடைய சொத்தையே காக்கக் கூடிய சண்டிகேஸ்வரரை நாமும் தொடர்ந்து வழிபடும் போது நாம் இழந்தவையும் நம்மை நிச்சயம் வந்து அடையும் என்று சொல்லப்படுகிறது. அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப இதன் பலன் உடனே அல்லது சற்று தாமதமாகவோ கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீட்டில் குடியேற அம்மன் வழிபாடு

இந்த சண்டிகேஸ்வரர் வழிபட்டால் நம் வாழ்க்கையில் இழந்தவை தொலைத்தவை என அனைத்தையும் நிச்சயமாக திரும்பப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -