பூரி சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த அசத்தலான உருளைக்கிழங்கு மசாலாவை ஒரு முறை இவ்வாறு செய்திடுங்கள்

potato
- Advertisement -

பூரி மசாலா அல்லது பூரி கிழங்கு பூரியுடன் பரிமாறப்படும் ஒரு சுவையான உணவு வகை. இது வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது தவிர சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். பூரி கிழங்கு தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான உணவு வகை. இது தவிர ஆந்திர மாநிலத்திலும் இது பிரபலம். அங்கு இது  பூரி கரி, ஆலு மசாலா போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. பூரி மசாலா செய்வது மிகவும் சுலபம், சுவையான பூரி மசாலா நீங்களும் சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள். இதில் மசாலாக்கள் சேர்த்து தாளிக்கப்படுவதால் இதன் வாசனை சாப்பிடுவதற்கு அசைவத்தின் சுவையில் இருக்கும். எனவே பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அசத்தலாக இருக்கும். வாருங்கள் இந்த பூரி உருளைக்கிழங்கு மசாலாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு (வேக வைத்தது) – 4, பெரிய வெங்காயம் – 2, எண்ணெய் – 2, கடுகு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு குத்து, சீரகம் – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கடலை பருப்பு – 2 ஸ்பூன், இஞ்சி (பொடியாக நறுக்கியது) _ சிறிய துண்டு, பூண்டுப் பற்கள் (பொடியாக நறுக்கியது) – 5, கடலை மாவு – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். 2 ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

நான்கு பச்சை மிளகாயை நடுவில் கீறி சேர்த்துக்கொள்ளவும்5 பல் பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். ஒரு சிறிய துண்டு பட்டையை பொடியாக உடைத்து சேர்த்து கொள்ளவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.அதில் 1-2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். பின்னர் மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி கையால் மசித்து விடவும். வேகவைத்த உருளைக் கிழங்குகளை வெங்காய கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றை மென்மையாக கிளறி 2-3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.ஒரு சிறிய பாத்திரத்தில் 1 ஸ்பூன், கடலை மாவு சேர்த்து 4 முதல் 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். கரைத்து வைத்துள்ள கலவையை உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். சுவையான பூரி மசாலா தயார், பூரியுடன் சேர்த்து பரிமாறவும்.

- Advertisement -