10 நிமிடத்தில் இன்ஸ்டன்டாக இப்படியும் கூட பூண்டு குழம்பு வைக்கலாமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே. தக்காளி வேண்டாம். புளியும் வேண்டாம்.

poondu-kuzhambu
- Advertisement -

தக்காளி இல்லாமல் கூட பூண்டு குழம்பு வைக்கலாம். ஆனால் புளி இல்லாமல் எப்படிங்க பூண்டு குழம்பு வைப்பது என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த மழைக் காலத்திற்கு ஏற்ற காரசாரமான தக்காளி சேர்க்காமல், புளி சேர்க்காத ஒரு பூண்டு குழம்பு ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இதுவரைக்கும் நீங்கள் சுவைக்காத ரெசிபி. சூப்பரான ரெசிபி. அதேசமயம் 10 நிமிஷத்துல செய்யக்கூடிய ரெசிபி. சுவைக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. சுடச்சுட ஒரு குண்டான் சாதம் இருந்தாலும், இந்த குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் உள்ளே இறங்குவது தெரியாது. சரி வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

poondu

முதலில் 15 லிருந்து 20 பூண்டு தோலுரித்து, ஒரு சிறிய உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடித்த பூண்டு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன் சேர்த்து தாளித்து நறுக்கி வைத்திருக்கும் – 15 பல் பூண்டு, வர மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து முதலில் பூண்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி விட வேண்டும்.

poondu-kuzhambu1

பூண்டு வதக்கிய பின்பு, நீளவாக்கில் வெட்டிய மீடியம் சைக்கிள் இருக்கும் 1 வெங்காயத்தை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, குழம்பு மிளகாய் தூள் –  2 ஸ்பூன் சேர்த்து, முப்பது செகண்ட் வரை வதக்கி 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் லேசாக கொதித்து வரட்டும்.

- Advertisement -

அதன் பின்பும் 100 கிராம் அளவு இருக்கும் கட்டித் தயிரை கட்டிகள் இல்லாமல் கலந்து, கடாயில் ஊற்றி விடுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக குழம்பை கலந்து விடுங்கள். கைவிடாமல் இரண்டு நிமிடம் போல கலந்து கொண்டே இருங்கள். இந்த இடத்தில் குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து விட வேண்டும்.

curd

குழம்பு இரண்டு நிமிடம் போல கொதிக்கட்டும். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் இட்லி மாவில், 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து, குழம்பில் ஊற்றி, குழம்பை மிதமான தீயில் 7 லிருந்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். நாம் ஊற்றிய எண்ணெய் பிரிந்து மேலே வரும். அதுவரைக்கும் குழம்பை கொதிக்க வைத்தால் போதும்.

kuzambu

உங்கள் வீட்டில் இட்லி மாவு இல்லை என்றால் 1 ஸ்பூன் கடலை மாவில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்தும் குழம்பில் ஊற்றி பச்சை வாடை போகும் அளவிற்கு கொதிக்க வைக்கவேண்டும். குழம்பு கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். மேலே கொத்தமல்லி தலை தூவி, சுடச்சுட சாதத்தில் பரிமாறி சுவைத்துப் பாருங்கள். தக்காளி போடவில்லை எந்த குறையும் இருக்காது. புளி ஊற்ற வில்லை என்ற குறையும் இருக்காது. குழம்பு அட்டகாசமான சுவையில் நமக்கு கிடைத்திருக்கும். உங்களுக்கு இந்த சிம்பிள் ரெசிபி பிடிச்சிருக்கா உங்க வீட்டுல இந்த ஆரோக்கியமான குழம்பு ரெசிபியை செஞ்சு அசத்துங்க.

- Advertisement -