சாதத்தை 10 நிமிடத்தில் வேகவைத்து வடிக்க சூப்பரான வீட்டு குறிப்பு.

rice1
- Advertisement -

இப்போதெல்லாம் சாதத்தை குக்கரில் வேக வைத்து சாப்பிடாமல், வடித்து சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்கிறார்கள். ஆனால் குக்கர் இல்லாமல் சாதத்தை சாதாரணமாக குண்டானில் வைத்து வேக வைத்தால் ரொம்ப நேரம் சாதம் வேகுது. பெரும்பாலும் காலையில் அவசர அவசரமாக சமைப்பவர்களுக்கு, இந்த சாதம் வடிப்பது மிகப்பெரிய டாஸ்க்காக இருக்கும்.

சாதம் வடித்தும் சாப்பிட வேண்டும். அதேசமயம் அந்த சாதம் சீக்கிரமும் வேக வேண்டும். அதை குக்கரில் விசிலும் போடக்கூடாது. இதற்கு ஏதாவது ஒரு ஐடியா இருக்கா. இருக்குதுங்க. இந்த ஐடியாவை நாம் குக்கரை வைத்து தான் செய்யப் போகின்றோம். ஆனால் சாதத்தை வடித்தும் சாப்பிட போகின்றோம். விசிலும் விட போவது கிடையாது. சாதமும் 10 நிமிடத்திற்குள் வெந்துவிடும். அது எப்படிங்க சாத்தியமாகும். சூட்சமமான இந்த வீட்டு குறிப்பு தெரிந்தால் மேலே சொன்ன அத்தனை விஷயமும் சாத்தியம்தான்.

- Advertisement -

கேஸ் வீணாகாமல் சாதம் சீக்கிரம் வேக வைக்க குறிப்பு

முதலில் உங்களுக்கு எவ்வளவு அரிசி தேவையோ, அந்த அரிசியை நான்கில் இருந்து ஐந்து முறை நன்றாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். உங்க வீட்டில் இருக்கும் அரிசியை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். எவ்வளவு நேரம் ஊற வைக்க முடியுமோ அதை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு குக்கரில் அரிசியின் அளவுக்கு அதிகமாகவே தண்ணீரை ஊற்றி சூடு செய்யவும். அதாவது குக்கரில் விசில் வைக்க வேண்டும் என்றால், 1 டம்ளர் அரிசிக்கு, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றுவோம். ஆனால் இந்த மெத்தடுக்கு அப்படியெல்லாம் கணக்கு கிடையாது. குண்டானில் சாதம் வடிக்க, அரிசிக்கு ஏற்ப அதிகமாக தண்ணீர் வைப்போம் அல்லவா. அதேபோல குக்கரில் தண்ணீரை ஊற்றி உலை வையுங்கள்.

- Advertisement -

ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீரையெல்லாம் வடிகட்டி விட்டு குக்கரில் கொதித்துக் கொண்டிருக்கும் உலையில் போடவும். இப்போது இந்த குக்கருக்குள் இருக்கும் அரிசியில் நீங்கள் போட வேண்டியது இந்த 1 பொருள் ‘கொட்டாங்குச்சி துண்டு’. தேங்காய் துருவிய பிறகு கொட்டாங்குச்சியை உடைத்து ஒரே ஒரு சின்ன துண்டை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த துண்டை இந்த குக்கர் இருக்கும் சாப்பாட்டில் போட்டு விடுங்க.

பிறகு சாதம் நன்றாக இரண்டு கொதி வரட்டும் அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து விடுங்கள். குக்கருக்கு மேலே மூடியை போட்டு வழக்கம் போல விசில் போடுங்க. ஆனால், விசில் வரக்கூடாது. ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் குக்கர் விசிலை லேசாக அப்படியே தூக்கி பார்க்க வேண்டும். பிரஷர் அதிலிருந்து சத்தத்தோடு வெளி வருகிறதா என்று. (இந்த சமயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக வேலை பார்க்கவும். விசிலை எல்லாம் அப்படியே தூக்கி எடுத்து விட்டுடாதீங்க).

- Advertisement -

லேசாக பிரஷர் அதில் இருக்கும். 5 அல்லது 6 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். குக்கரை அடுப்பில் இருந்து மெதுவாக கீழே இறக்கி வைத்து விட்டு, குக்கருக்கு மேலே இருக்கும் விசிலை லேசாக எடுத்து பாருங்கள். பிரஷர் லேசாக குறைந்து விடும். பிரஷர் மொத்தமும் 30 செகண்டில் குறைந்து விடும். பிரஷர் குறைந்த உடன் விசிலை எடுத்து விடுங்கள்.

இப்போது குக்கரை திறந்து பாருங்கள். உங்கள் சாதம் சூப்பராக வெந்து இருக்கும். அதில் கஞ்சி தண்ணீரும் இருக்கும். குக்கர் மூடிக்கு மேலே இருக்கும் அந்த கேஸ் கட், ரப்பரை மட்டும் எடுத்து விட்டு, குக்கரை மூடி, விசில் போட்டு இப்போது இதை ஒரு பாத்திரத்தில் வைத்து வடிக்க வேண்டும். கேஸ் கட்டை எடுத்தவுடன் குக்கர் மூடியில் சின்ன ஓட்டை, ஓரங்களில் இருக்கும்.

அந்த ஓட்டையின் வழியாக கஞ்சி தண்ணீர் மட்டும் வெளியே வடிந்து வந்து விடும். ஐந்து நிமிடம் கழித்து வழக்கம் போல சாதத்தை நிமித்தி எடுத்துப் பாருங்கள். சாதம் கஞ்சி தண்ணீர் இல்லாமல் வடித்த சாதம் போல பொலபொலன்னு சூப்பரா உங்களுக்கு கிடைத்திருக்கும். உள்ளிருக்கும் அந்த கொட்டாங்குச்சி சில்லை ஞாபகமாக வெளியே எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மிக்ஸி ஜாரை வேகமாக ஓட வைக்க வீட்டுக்குறிப்பு

கொஞ்சம் பக்குவமாக இந்த மெத்தடை முயற்சி செய்யும்போது, இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த மெத்தட் உங்களுக்கு பழகிவிடும். பிறகு குக்கரிலேயே ஆரோக்கியமாக சாப்பாடை வடிக்கலாம். ரொம்ப நேரம் கேஸ் உங்களுக்கு மிச்சமும் ஆகும். தேவைப்படுபவர்கள் மேலே சொன்ன இந்த வீட்டு குறிப்பு முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -