தக்க சமயத்தில் இந்த குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய 10 பயனுள்ள குறிப்புகள் இதோ உங்களுக்காக.

- Advertisement -

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று சொல்லுவார்கள். அதே போல தான் இந்த எளிமையான சின்ன சின்ன வீட்டு குறிப்பு உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயமாக பயன்படும். சமையலுக்கு தேவையான, அன்றாடம் வீட்டிற்கு தேவையான பயனுள்ள எளிமையான குறிப்புகள் 10 உங்களுக்காக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண இல்லத்தரசிகளைக் கூட, ஸ்மார்ட் இல்லத்தரசிகளாக மாறுவதற்கு இந்த குறிப்பு நிச்சயம் பயன்படும்.

குறிப்பு 1:
டீ வாங்கிய ஃப்ளாஷ்கை எவ்வளவுதான் கழுவி காய வைத்து, பிறகு வெந்நீரை ஊற்றி குடித்தாலும் அந்த வெந்நீரில், டீ வாசம் வீசும். கழுவிய ஃபிளாஸ்க்கை தண்ணீரை வடிகட்டி, உள்ளே ஈரம் இல்லாமல் காய வைத்து விட்டு, அதன் உள்ளே சின்ன சின்ன பேப்பரை கிழித்து போட்டு மூடி வையுங்கள். அதன் பிறகு பேப்பரை எல்லாம் கீழே கொட்டி விட்டு வெந்நீரை ஊற்றி குடித்தால், ஃபிளாஸ்க்கில் இருந்து எந்த ஒரு துர்நாற்றமும் வீசாது.

- Advertisement -

குறிப்பு 2:
எந்த காயில் பொரியலில் சமைக்கும் போதும் உப்பு அதிகமாவது இயல்புதான். ஒரு பிரட்டை எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி ரோஸ்ட் செய்து, அந்த பிரெட்டை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து ஒரு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்டுப் போகாது. இந்த பிரட் துகளை உப்பு அதிகமான பொரியலின் மேல் தூவி இரண்டு நிமிடம் லேசாக சூடு செய்தால் உப்பு சரியாகிவிடும்.

குறிப்பு 3:
சமயத்தில் வீட்டில் இருக்கும் காலியான பேட்டரி, புது பேட்டரி எல்லாம் ஒன்றாக கலந்து விடும். அதை எளிதாக நம்மால் பிரித்து எடுக்க முடியாது. ஒவ்வொரு பேட்டரியாக கையில் தூக்கிப் பாருங்கள். எடை அதிகமாக இருக்கும் பேட்டரி புதுசு. எடை குறைவாக இருக்கும் பேட்டரி பழையது. பயன்படுத்திய பேட்டரி எடை குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிப்பு 4:
உங்க வீட்டு ஸ்விட்ச் போர்டு எல்லாமே ரொம்பவும் அழுக்காக இருக்கிறதா. கொஞ்சமாக நெயில் பாலிஷ் ரிமூவரை ஒரு துணியில் தொட்டு அழுக்கான ஸ்விட்ச் போர்டை துடைத்தால், எல்லாம் ஒரு நிமிடத்தில் பளிச் பளிச்சென மாறும்.

குறிப்பு 5:
ஒரு அடி கனமான கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கைப்பிடி அளவு தூள் உப்பை போட்டு வறுத்து நன்றாக சூடு செய்யுங்கள். உப்பு நன்றாக சூடான பின்பு இதில் தேவையான அளவு பாதாம் பருப்பை போட்டு வறுக்க வேண்டும். நமித்து போன பாதாம் பருப்பாக இருந்தால் கூட அது இந்த உப்போடு சேர்ந்து வறுபட்டு மொறுமொறுப்பாக, லேசான உப்பு சுவையில் சூப்பரா மாறிவிடும். இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -

குறிப்பு 6:
சின்னதா ஒரு பிளாஸ்டிக் கிண்ணம் எடுத்துக்கோங்க. அதில் ஆப்ப சோடா 1 ஸ்பூன், எலுமிச்ச பழச்சாறு 1 ஸ்பூன், ஒரு சிறிய கரி துண்டு(அடுப்புக்கரி) போட்டு, இதை அப்படியே ஃப்ரிட்ஜுக்குள் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். பிரிட்ஜ் எப்போதுமே துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

குறிப்பு 7:
சில வீடுகளில் அம்மாக்கள் பாட்டிகள் ஊசியில் நூல் கோர்க்க ரொம்பவும் சிரமப்படுவார்கள். ஒரு பருக்கை சாதம் எடுத்து அதை நசுக்கி, நூலின் நுனியில் நன்றாக தடவி விடுங்கள். ஒரு நிமிடத்தில் அந்த சாதம் காய்ந்து விடும். நூல் வளையாமல் அப்படியே மொறுமொறுப்பாக இருக்கும். இதை ஊசியில் கோர்ப்பது மிக சுலபம்.

குறிப்பு 8:
ஒரு சிறிய கண்ணாடி பவுலில் சுத்தமான நல்ல தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் தேன் ஊற்ற வேண்டும். ஐந்து நிமிடங்கள் அந்த பவுலை அசைக்காமல் அப்படியே வைத்து விடுங்கள். தேன் தண்ணீரில் கரையாமல் ஒரே இடத்தில் அடியில் தேங்கி நின்றால், உங்கள் வீட்டில் இருக்கும் தேன் சுத்தமானது என்று அர்த்தம். தேன் தண்ணீரில் கரைந்து விட்டால், தேனில் கலப்படம் இருப்பதாக அர்த்தம்.

குறிப்பு 9:
டம்ளரில் முதலில் சர்க்கரை, அதன் பின்பு காபி பவுடர் போட்டு அதன் பின்பு பாலை ஊற்றி இரண்டு முறை நுரை பொங்க ஆத்தி சுவைத்து பாருங்கள். காபியின் சுவை கூடுதலாக இருக்கும். அதே சமயம் காபி பவுடர் டம்ளருக்கு அடியில் அதிகமாக ஒட்டியும் பிடிக்காது. (சில பேர் டம்ளரில் காபி பவுடரை முதலில் போட்டு பிறகு சர்க்கரை போடுவார்கள் அல்லவா.)

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

குறிப்பு 10:
ஒரு வாரத்துக்கு சமையலுக்கு தேவையான புளியை எடுத்துக் கொள்ளுங்கள். புளியில் சுடுதண்ணீரை ஊற்றி, நன்றாக கரைத்து புளி கரைசலை ஓரளவுக்கு திக்காக எடுக்க வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் அளவு கல் உப்பு போட்டு, அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் போல கொதிக்க விட்டு, நன்றாக ஆற வைத்துவிட்டு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் தினம் தினம் காலை அவசரமாக சமைக்கும்போது இந்த புளி கரைசலை சுலபமாக பயன்படுத்தலாம். பாட்டிலில் ஊற்றி ஃப்ரீசரில் ஸ்டோர் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -