சனிக்கிழமை சனி ஹோரையில் இதை செய்து வருவோருக்கு, இந்த சனிப்பெயர்ச்சியினால் எள்ளளவும் பாதிப்பு ஏற்படாது. சனிஸ்வரரின் உக்கார பார்வையில் இருந்து தப்பிக்க 12 ராசிக்கும் ஏற்ற எளிய பரிகாரம்.

- Advertisement -

சனிப்பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்களை கொடுக்கும். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் 12 ராசிகளுக்கும் பொதுவான ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது சனிப்பெயர்ச்சியின் பலனாக சனி பகவானால் நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் காத்து கொள்ளலாம். இப்போது அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சனிபகவான் ஒரு ராசியில் வரும் போது அந்த ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து துன்பங்களை தருவார் என்ற அச்சம் நிலவி வருகிறது உண்மை அதுவல்ல. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நன்மை, தீமைகள் அனைத்தையும் சரிவர புரிந்து கொள்வதே சனி பகவான் நம் ராசியில் இருக்கும் போது தான். அதை தெளிவாக உணர்ந்து இனி வரும் நாட்களில் தெளிவான சிந்தனையுடனும், நல்ல எண்ணங்களோடும், யாரையும் துன்புறுத்தாமல் நேர்மையுடன் ஒருவர் வாழ முற்பட்டால் அவர்களை வாழ்க்கையில் உயர்நிலையை அடைய நிச்சயமாக இவர் வழி செய்வார் என்பதில் சந்தேகமில்லை. இப்போது சனி பகவானுடைய பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை சனிக்கிழமையில் சனி ஹோரையில் தான் செய்ய வேண்டும். சனி ஹோரையில் நவகிரகங்கள் இருக்கும் ஆலயத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

சனி பெயர்ச்சி பரிகாரங்கள்
இந்த பரிகாரத்தை செய்ய சனீஸ்வர பகவானுக்கு கருப்பு அகல் அல்லது இரும்பு அகல் இரண்டில் ஏதாவது ஒன்று எடுத்து அதில் எள் தீபம் ஏற்ற வேண்டும். எள் தீபம் என்றால் ஒரு கருப்பு துணியில் எள்ளை வைத்து முடிச்சாக கட்டி அந்த முடிச்சை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது. இதை ஏற்றும் போது சனீஸ்வர பகவானுக்கு எள், வெல்லம், உப்பு இவை மூன்றையும் வைத்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு நவகிரகத்தை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இதை ஒன்பது சனிக்கிழமை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் மேலும் நல்ல பலன்களை பெறலாம்.

- Advertisement -

சனீஸ்வரரின் பிடியிலிருந்து தப்பிக்க ஆஞ்ச நேயருக்கும் தீபத்தை ஏற்றலாம். ஆஞ்சநேயருக்கு ஏற்றும் போது கருப்பு எள்ளை பொடி செய்து பவுடராக்கி, அத்துடன் வெல்லத்தையும் பொடி செய்து இரண்டையும் ஒன்றாக பிசைந்து மா விளக்கை போல, இந்த பொடிகளை வைத்து அகல் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இதில் கருப்பு நூல் அதாவது கருப்பு துணியை திரி போல போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். ஆஞ்சநேயருக்கு இந்த இரண்டு தீபத்தை ஏற்றி வணங்கும் போது சனீஸ்வரருக்கு ஏற்றி வணங்குவதை விட அதிக பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இவை இரண்டுமே செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள், அல்லது இந்த இரண்டு ஆலயங்களிலுமே அருகில் இல்லை என்பவர்கள் விநாயகருக்கும் தீபம் ஏற்றலாம். விநாயகர் கோவில் இல்லாத இடமே இல்லை. விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் பஞ்சு திரி போட்டு சனிக்கிழமையில் இரண்டு தீபம் ஏற்றி வரும் போதும், சனீஸ்வரரின் உக்கிர பார்வையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கணவனை திட்டும் மனைவிமார்களே உஷார்! உங்ககிட்ட காசு தங்காம போறதுக்கு இதுதான் காரணமாம் தெரியுமா?

இந்த பரிகாரங்களில் எதை செய்ய முடியுமோ அந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து, இந்த சனிப்பெயர்ச்சியினால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்ளுங்கள்.

- Advertisement -