15 நிமிடத்தில் உங்களுடைய முகத்தை ஃபேஷியல் செய்தது போல மாற்ற இந்த 1 பொருள் போதும்.

face5
- Advertisement -

சில பேருக்கு முகமானது கருத்துப்போய் ரொம்பவும் வாட்டமாக காணப்படும். நம்முடைய முகம் எப்போதுமே ஃபேஷியல் செய்தது போல அழகாக இருக்க பொலிவாக இருக்க என்ன செய்வது. நிறைய காசு செலவு இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே ஒரு சுலபமான பேக் முகத்திற்கு எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பேக்கை போட்ட 15 நிமிடத்தில் உங்களுடைய இரண்டு கன்னங்களும் அப்படியே ஜொலிஜொலிக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்துட்டு ரிசல்ட் எப்படி இருக்குன்னு கண்ணாடி முன்னாடி போய் பாருங்க.

முதலில் ஒரு சிறிய பௌலில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஷாம்பூ anti-dandruff ஷம்பூவாக இருக்கக்கூடாது. மத்த வேறு எந்த ஹேர் ட்ரீட்மென்ட்காக பயன்படுத்தும் ஷாம்பு ஆகவும் இருக்கக் கூடாது. சாதாரண ஷாம்புவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு மற்ற ஷாம்புவை முகத்தில் போட ரொம்ப பயமாக இருந்தால் பேபி ஷாம்புவை கூட எடுத்து 1 ஸ்பூன் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

பேபி ஷாம்பூ 1 ஸ்பூன், 2 சிட்டிகை கஸ்தூரி மஞ்சள், காய்ச்சாத பால் 2 ஸ்பூன், தேவையான அளவு கான்பிளவர் மாவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து ஒரு பேக் போல தயார் செய்து கொள்ளவேண்டும். முகத்தை சுத்தமாக கழுவி துடைத்து விட்டு, இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

முகத்தில் பேக் நன்றாக காய்ந்து வந்திருக்கும் உங்களுடைய கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு முகத்தை வட்ட வடிவில் லேசாக ஜென்டிலாக மசாஜ் செய்து ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவிப் பாருங்கள். முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த பேக்கை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தினமும் இந்த பேக்கை போடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதே பேக்கை கருப்பான கை கால்களில் போட்டாலும் அந்த இடம் உடனடியாக வெள்ளையாக மாறும். கழுத்துப் பகுதிகளிலும் மறக்காமல் இந்த பேக்கை போடுங்கள்.

பின்குறிப்பு: உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் ஆக இருந்தால் இந்த பேக்கை பேட்ச் டெஸ்ட் எடுத்து விட்டு அதன் பின்பு முகத்தில் போட்டுக்கொள்ளலாம். ஷாம்புவை முகத்தில் போட எனக்கு விருப்பமே இல்லை என்பவர்கள் கான்பிளவர் மாவுடன், ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து பேக் தயாரித்து அதை முகத்தில் போட்டால் முகம் வெள்ளையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -