இந்த 3 இல் தூங்கும் பொழுது நீங்கள் எப்படி தூங்குவீர்கள்? ஒருக்களித்து, குப்புறப்படுத்து மற்றும் நேராகப்படுத்து உறங்குபவர்கள் ஆரோக்கியம் எப்படி இருக்கும் தெரியுமா?

- Advertisement -

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும் என்பது தான் முறையாகும். ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உறங்கினால் உங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஒரு விதமான மாற்றங்கள் உருவாகும். இது ஒரே நாளில் தெரியாவிட்டாலும், இரண்டு வாரத்திற்கு தொடர்ந்தால் கண்டிப்பாக உங்களால் உணர முடியும். நீங்கள் இந்த 3 நிலைகளில் தூங்குவதால் உங்களது ஆரோக்கியம் எப்படி இருக்கும்? என்பதை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் அறிய இருக்கிறோம்.

ஒரு மனிதன் மூன்று நிலைகளில் நித்திரை கொள்ள விரும்புகிறான். முதல் நிலையில் நேராக முதுகை மெத்தையில் வைத்து படுப்பது ஆகும். இந்த நிலையில் படுப்பவர்களுக்கு குறட்டை வர வாய்ப்புகள் உண்டு. இரண்டாம் நிலை குப்புறப்படுத்து தூங்குவது. இது குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் படுக்கும் நிலையாகும். இதனால் வயிற்றுப் பகுதி ஆனது மெத்தையில் அழுந்தும். மூன்றாம் நிலை ஒரு புறமாக ஒருக்களித்து படுப்பது ஆகும்.

- Advertisement -

1. நேராக படுப்பது:
நீங்கள் நேராக படுப்பதால் நல்ல ஒரு ஆரோக்கியத்தை பெறுகிறீர்கள். நேராக படுப்பவர்களுக்கு குறட்டை தொந்தரவு இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இதை தவிர பெரிதாக எந்த பிரச்சனையும் இவர்களுக்கு கிடையாது. பெண்கள் நேராக படுப்பதால் மார்பகங்கள் சுருங்காது, மேலும் தளர்ந்து தொங்கவும் செய்யாது. இது அவர்களுக்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடியது. மேலும் நேராக படுப்பதால் முதுகெலும்பு சீரமைக்கப்படுகிறது. சருமத்தில் மற்ற இரண்டு வகையில் தூங்குபவர்களை விட, இவர்களுக்கு சுருக்கங்களோ, புள்ளிகளோ உருவாகாது. கழுத்து தசைகளில் அசைவுகரியம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே அவ்வபொழுது நீங்கள் நேர் நிலையிலிருந்து ஒருக்களித்தும் படுத்து முயற்சிக்கலாம்.

2. குப்புற படுப்பது:
நீங்கள் குப்புறப் படுப்பவர்களாக இருந்தால் நிச்சயம் உங்களுடைய ஆரோக்கியம் சரியாக இருக்காது. குப்புறப் படுப்பதால் தலை ஒரு பகுதியில் முழுமையாக திரும்பி படுக்க வேண்டி இருக்கும். இதனால் முதுகெலும்பு, கழுத்து தசை பகுதிகளில் வலி உணர்வு அடிக்கடி ஏற்படலாம். முதுகு வலியால் தூக்கமின்மை பிரச்சனையும் உங்களுக்கு வரக்கூடும். வயிறு முழுவதும் அழுத்தப்படுவதால் அசௌகரியம் உண்டாகி பாதியிலேயே தூக்கம் களையும். ஆனால் இம்முறையில் தூங்குபவர்களுக்கு குறட்டை வராது.

- Advertisement -

3. ஒருக்களித்து படுப்பது:
வலது புறமாகவோ அல்லது இடது புறம் புறமாகவோ ஒருக்களித்து படுப்பவர்களுக்கு கை, கால் வலி வருவதற்கு நிச்சயம் வாய்ப்புகள் அதிகம் உண்டு. கைகள் மற்றும் கால்களில் முழு அழுத்தம் கொடுப்பதால் இந்த பிரச்சனை வருகிறது. தொடர்ந்து ஒரே நிலையில் படுப்பதால் செரிமான பிரச்சனைகளும், நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகளும் வரக்கூடும். இவர்களுடைய ஆரோக்கியத்தில் ரத்த ஓட்டம் மேம்படுகிறது மேலும் குறட்டை உருவாவதை தடுக்கிறது.

மேலே கூறப்பட்ட மூன்று நிலைகளிலும் சாதக மற்றும் பாதகமான பலன்கள் உண்டு எனினும் குப்புற படுத்து தூங்குவதை காட்டிலும், ஒருக்களித்து தூங்குவதை காட்டிலும், நேராக படுப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகிறது. ஆரோக்கியத்திற்கு குறிப்பாக நான்மை சேர்கிறது. எனவே முடிந்தவரை நேராக படுத்து உறங்குவது தான் ஒரு மனிதனுக்கு நன்மை தரக்கூடிய உறக்கநிலை ஆகும்.

இதையும் படிக்கலாமே:
நவதானியங்கள் பெயர்கள் | Navathaniyam names in Tamil

மேலும் ஒரே நிலையில் நீண்ட நேரம் படுக்கக் கூடாது. அவ்வபொழுது உறக்கத்திலேயே மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இதனால் எல்லா விதமான ஆரோக்கிய பிரச்சனையில் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம். குறிப்பாக முதுகு வலி, கை கால் வலி, கழுத்து தசை வலி போன்றவற்றிலிருந்து பாதுகாக்க நல்ல தலையணை மற்றும் மெத்தைகளை பயன்படுத்துங்கள். சுவாச பிரச்சனைகள் இருப்போர் ஒன்றுக்கும் மேற்பட்ட தலையணைகளை பயன்படுத்தலாம். மற்றவர்கள் ஒற்றை தலையணையை பயன்படுத்துவது தான் நல்லது.

- Advertisement -