பூஜையில் தியானம், அர்ச்சனை, மந்திரம் இந்த 3 விஷயத்தை செய்வதால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொண்டால் நீங்களே வியந்து போவீர்கள்!

god-archanai

இறைவனை வணங்கும் அத்தனை பேருக்கும் பலன் கிடைக்கிறதா? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ‘நான் கடவுளை வணங்கி விட்டேன் இனி எனக்கு நடக்கும் எல்லாம் நல்லதாகவே நடக்கும்’, என்பது நிச்சயம் உண்மை இல்லை. அது ஏன் தெரியுமா? கடவுளை வணங்கினாலும் எனக்கு நல்லது நடக்கவில்லையே! என்று கூறுபவர்களுக்கும் விடையாக இந்த பதிவு அமைய இருக்கிறது. இவைகளை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

praying-god1

பாவங்களும், தீமைகளும் செய்து விட்டு கடவுளைத் தொழுது விட்டால் எல்லாமே சரியாகி விடுமா? இதில் என்ன நியாயம் இருக்கிறது? அதனால் தான் இறைவனை தொழும் அனைவருக்கும் பலன் கிடைப்பதில்லை. உண்மையில் கடவுளை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா? கடவுளை வணங்குவதற்கு நம்முடைய மனதில் திரிகரணசுத்தி தேவைப்படுகிறது. அதென்ன திரிகரணசுத்தி? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் எழும்!

முதலில் வீட்டிலேயோ அல்லது கோவிலுக்கு சென்றோ கூட நீங்கள் கடவுளை வணங்கும் பொழுது எப்படி வணங்குவீர்கள்? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மனதில் நினைத்த உடனேயே தெய்வங்கள் ஓடி வரும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் அதை செய்வதற்கு திரிகரணசுத்தி உங்களுக்கு வேண்டும் என்பதை உணர வேண்டும். ‘திரிகரணசுத்தி’ என்பது இந்த மூன்று விஷயங்களை செய்து நம்மிடம் இருக்கும் தீய விஷயங்கள் அனைத்தையும் நீக்கி இறைவனை நேரடியாக அவரிடமே சென்று வணங்குவது ஆகும்.

praying god

இறைவனை வணங்கும் பொழுது தியானம் செய்வதும், அர்ச்சனை செய்வது, மந்திரங்கள் உச்சரிப்பதும் கட்டாயம் செய்ய வேண்டும். நாம் வீட்டில் பூஜை செய்தாலும் இதே போல் தான் மூன்று விஷயங்களையும் கடைபிடித்து பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இந்த மூன்று விஷயங்களை இறைவனுக்கு செய்வதால் உங்களிடம் இருக்கும் எல்லா தீய விஷயங்களும் கழுவப்படுவதாக ஐதீகம் உள்ளது.

- Advertisement -

பொதுவாகவே மனிதனுக்கு ஆசை, கோபம், பொறாமை, பகை என்கிற 4 தீய விஷயங்கள் ஆட்கொண்டு இருக்கும். ஏதாவது ஒரு ரூபத்தில் இந்த குணங்கள் மனிதனுக்கு வந்துவிடுகிறது. இந்த 4 விஷயங்களை நீக்குவதற்கு தியானத்தில் ஈடுபட வேண்டும். அது போல் பொய் சொல்லுவது, ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் கோள் மூட்டுவது, கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது ஆகிய இந்த 3 விஷயங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் நிச்சயமாக மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் இந்த பாவங்கள் கழுவப்படும். பிறர் உயிரைப் பறிப்பவன், திருடுபவன், பிறன்மனை காண்பவன் அதாவது அடுத்தவர்களுடைய மனைவியை அடைய நினைப்பவன் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் அழுக்காகி விடுகிறான். இவனுடைய அழுக்குகளை கழுவ இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

archanai-poo

தியானம், அர்ச்சனை, மந்திரம் ஆகிய தீர்த்தங்களில் நம்முடைய தீய குணங்களை கழுவிவிட்டு பின்னர் இறைவனை வணங்கினால் உங்களுடைய வேண்டுகோளை கேட்க எந்த நேரத்திலும் செவி சாய்ப்பார் என்பது முற்றிலுமான உண்மை. இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள், உங்களுடைய பாவங்களை நீக்கி வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள்! சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.