வெயிலுக்கு உடலையும் வயிறையும் குளுகுளுவென வைத்திருக்க இந்த அருமையான கேரட் ஜூஸை இப்படி மூன்று வித சுவையில் செய்து பாருங்கள்

carrot
- Advertisement -

இப்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்ற தொல்லைகளும் வருகிறது. அதிகப்படியான வெப்பநிலை காரணமாக தாகத்தைத் தணித்துக்கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நமது உடலின் உஷ்ணநிலை குறைவதில்லை. ஒரு சிலர் உடல் சூட்டைத் தணிப்பதற்காக சில்லென்ற தண்ணீர் குடிக்க ஆசைப்பட்டு தண்ணீரை ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கின்றனர். ஆனால் இப்படி ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கும் தண்ணீரின் மூலம் நமது உடலின் உஷ்ணம் அதிகரிக்கிறதே தவிர உடல் குளிர்ச்சி அடைவது கிடையாது. ஆகவே உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய ஜூஸ் வகைகளை இதுபோன்ற நேரங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே இந்த ஜூஸை தயார் செய்து கொள்ளலாம். அவ்வாறு அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய அல்லது எளிமையாக கிடைக்கக்கூடிய கேரட்டை வைத்து இப்படி 3 சுவைகளில் ஜூஸ் செய்து குடித்தால் உங்களின் உடல் சூடு குறையும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கேரட் ஜூஸ்: 1
முதலில் இரண்டு கேரட்டை சுத்தமாக கழுவி, அதன் மேல் உள்ள தோலை சீவி கொண்டு கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் 2 தழை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவைக்கு ஏற்ப சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பல்லவி பிறந்தேன் இவற்றுடன் இரண்டு ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரை மூடி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இவற்றை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி கேரட் ஜூஸை மட்டும் தனியாக வடிகட்டி எடுக்க வேண்டும்.

கேரட் ஜூஸ்: 2
முதலில் இரண்டு கேரட்டுகளை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒன்று அல்லது இரண்டு ஆரஞ்சு பழங்களை தோல் உரித்து, அதிலுள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கேரட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் தேவைக்கு ஏற்ப சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு ஐஸ் க்யூப்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் வடிகட்டி ஜூஸை மட்டும் குடிக்க வேண்டும்.

கேரட் ஜூஸ்: 3
முதலில் இரண்டு கேரட்டை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக அரைத்து கொண்டு வடிகட்டி குடித்தால் போதும். மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -