சுத்தம் செய்ய சிரமமாக இருக்கும் சில வீட்டு பொருட்களை தூக்கி எறியும் இந்த பொருட்களை வைத்தே நொடியில் சுத்தம் செய்யலாமே! நச்சுனு 5 டிப்ஸ் இதோ உங்களுக்காக!

sink-bucket-lemon
- Advertisement -

வீட்டில் இருக்கும் சில பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், விடாப்பிடியான கறைகளை அது ஏற்படுத்திக் கொள்ளும். இதை சுத்தம் செய்வதற்கு ஒரு நாள் முழுவதும் தேவையில்லாமல் மெனக்கெட வேண்டி இருக்கும். இப்படியான சில சிரமமான வேலையை கூட, சுலபமாக்கி தரும் இந்த அற்புதமான 5 குறிப்புகளை நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். சமையலறை மற்றும் வீட்டு குறிப்புகள் 5 இதோ உங்களுக்காக!

Tip 1:
வீட்டில் எல்லா இடங்களை சுத்தம் செய்தாலும், இந்த ஸ்விட்ச் பாக்ஸ் மட்டும் எப்பொழுதும் அழுக்காகவே இருப்பதை பல வீடுகளில் காண முடியும். ஸ்விட்ச் பாக்ஸில் ஒட்டிக் கொண்டிருக்கும் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குகள் மற்றும் கறைகளை அகற்ற ஒரு சிறிய காட்டன் பஞ்சை தேங்காய் எண்ணெயில் நனைத்து கொள்ள வேண்டும். மெயின் ஆப் செய்துவிட்டு பின்னர் ஸ்விட்ச் பாக்ஸில் இந்த பஞ்சை வைத்து லேசாக தேய்த்து எல்லா இடங்களிலும் சுத்தம் செய்தால் பளிச்சென மின்னும். இதை விட எஃபக்டிவ் ஆக வேலை செய்ய நெயில் பாலிஷ் ரிமூவர் பயன்படுத்தி பஞ்சில் நனைத்து சுத்தம் செய்து பாருங்கள், நிறைய அழுக்கு இருந்தாலும் சட்டுன்னு போகும்.

- Advertisement -

Tip 2:
நம் சமையல் அறையில் இருக்கும் அலுமினிய கடாய்கள் அதிகம் பயன்படுத்துபவர்கள் அதன் பின்புறத்தை அவ்வளவாக கண்டு கொள்வதே கிடையாது. இதனால் எண்ணெய் பிசுக்கள் ஒட்டிக் கொண்டு அழுக்காக காட்சியளிக்கும் இதை ரொம்பவே சுலபமாக சுத்தம் செய்ய ஒரு கைப்பிடி அளவிற்கு கோலமாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பிறகு இதை எடுத்து கடாயின் பின்புறம் எங்கெல்லாம் அழுக்குகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் நன்கு தடவி ஐந்து நிமிடம் மட்டும் ஊறவிட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் லேசாக கைகளை வைத்து தேய்த்து எடுத்தாலே அழுக்குகள் அனைத்தும் நீங்கும். பஞ்சு ஸ்கிரப்பர் வைத்து பரபரவென தேய்த்து பாருங்கள், புதிதாக வாங்கிய கடாய் போல ஜொலிக்கும்.

Tip 3:
மேலே கூறிய இந்த கோலமாவு பிளஸ் வினிகர் டிப்ஸ் உப்பு கறை மற்றும் அழுக்கு நிறைந்துள்ள பாத்ரூம் வாலி மற்றும் மக்குகளையும் தேய்த்து கழுவினால் ரொம்ப சுலபமாக அவை சுத்தம் ஆகிவிடும். நாள்பட்ட உப்பு கறையை கூட ரொம்ப சுலபமாக நீக்கக்கூடிய இதை நன்கு எல்லா இடங்களிலும் படும்படி தடவி ஐந்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு இரும்பு நார் கொண்டு லேசாக தேய்த்து எடுத்தால் எல்லா உப்பு கறையும் வெளியே வந்துவிடும். அழுக்குகளும் நீங்கி புதிதாக வாங்கிய பக்கெட் போல மின்னும்.

- Advertisement -

Tip 4:
நீங்கள் சமையல் அறையில் இரவு நேரங்களில் பார்த்தால் பாத்திரம் கழுவும் ஓட்டையிலிருந்து தான் பெரும்பாலான பூச்சிகள் மற்றும் கரப்பான்கள் வெளியில் வரும். எனவே பாத்திரம் கழுவும் சிங்கின் ஓட்டையை நீங்கள் இரவு தூங்கும் பொழுது ஏதாவது ஒரு மூடி போட்டு மூடிக் கொள்ளலாம். ஸ்டீல் சிங்க் பயன்படுத்துபவர்கள் அதன் ஓட்டைக்கு ஏற்ப டீ வடிகட்டிகளை கைப்பிடியை நீக்கி உங்கள் சிங்கின் அளவிற்கு ஏற்ப பார்த்து பொருத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். ரசக்கற்பூரம் எனப்படும் அந்துருண்டையை போட்டாலும் இந்த சிங்கில் இருந்து வரக்கூடிய கரப்பான் பூச்சிகள் தொல்லை இருக்காது.

இதையும் படிக்கலாமே:
இதையெல்லாம் வச்சு கூட பழைய மிக்ஸிய புதுசா மாத்தலாம்?எப்பவும் போல இல்லாம கொஞ்சம் புதுசா தான் யோசிப்போமே.

Tip 5:
எலுமிச்சைப் பழங்களை பயன்படுத்திவிட்டு மீதம் இருக்கும் தோலை தூக்கி போடாமல் அரை லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை தோலில் இருக்கும் சாறு முழுவதும் நீரில் இறங்கி இருக்கும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் விம் லிக்விட் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்பிரே பயன்படுத்தி நீங்கள் கிளாஸ் டாப் ஸ்டவ், இன்டக்ஷன் ஸ்டவ், கிச்சன் டைல்ஸ் மற்றும் பாத்திரம் கழுவும் சிங்க் போன்றவற்றை தினசரி சுத்தத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஈ, கரப்பான், பூச்சி, எறும்பு என்று எதுவும் அண்டாது.

- Advertisement -