இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள உடனே இந்த குருமாவை செய்து கொடுங்கள். ரோட்டுக் கடையில் சாப்பிடும் அதே சுவையில் அப்படியே இருக்கும்

kuruma
- Advertisement -

சமையல் என்பது ஒரே விதமான மசாலா பொருட்கள் வைத்து செய்யப்படும் உணவு தான். ஆனாலும் ஒவ்வொருவரின் கை பக்குவத்திற்கு ஏற்ப தனி விதமான சுவைகள் இருக்கும். அதுபோல ஹோட்டலில் சாப்பிடும் உணவு என்றால் தனி சுவை இருக்கும். ரோட்டு கடை களில் செய்யும் சட்னி, சாம்பார், குருமா இது போன்ற உணவுகளுக்கு தனிப்பட்ட சுவை இருக்கும். பலரும் விரும்பி சாப்பிடுவது இதுபோன்ற ரோட்டு கடை உணவுகளை தான். நாவிற்கு நச்சென்று காரசாரமாக இருக்கும் இவ்வாறான உணவுகளை வீட்டிலேயே செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எப்பொழுதும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ரோட்டுக்கடை குருமாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, பெரிய வெங்காயம் – 3, தக்காளி 2, பச்சை மிளகாய் – 8, சோம்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 2, பூண்டு – 5 பல், பொட்டுக்கடலை – 3 ஸ்பூன், புதினா தழை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, சில்லி பவுடர் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கிராம்பு – 2, ஏலக்காய் – 1.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு ஒரு வெங்காயம் மற்றும் ஒரு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு துண்டு இஞ்சி, பூண்டு பல் சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் புதினா தழை, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், சோம்பு மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை இவற்றுடன் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் சில்லி பவுடர், அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இந்த மசாலா கலவை கெட்டியான பதத்தில் இருந்தால் இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான ரோட்டு கடை குருமா தயாராகிவிட்டது.

- Advertisement -