பெண்களுக்கு தேவையான அட்டகாசமான 5 எளிய வீட்டு குறிப்புகள்! இது கூட தெரியலைன்னு ஃபீல் பண்ணாதீங்க.

cooking-tips-samayal
- Advertisement -

பெண்களுக்கு வீடு மற்றும் சமையலறை தான் அதிகம் செலவிடும் நேரமாக இருக்கிறது. இன்று இருக்கும் அவசர உலகில் பெண்களும் வேலை பார்த்து சம்பாதித்துக் கொண்டே தான் வீட்டையும் கவனித்து கொள்கிறார்கள். இந்த எளிய குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் இல்லத்தரசிகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். அந்த வகையில் இதுவரை யாரும் அறியாத ரொம்பவே பயனுள்ள சமையலறை மற்றும் வீட்டு குறிப்புகளை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

verkadalai

குறிப்பு 1:
வேர்க்கடலையை சுத்தம் செய்வது ரொம்ப சுலபமான வேலையாக இருக்க மொத்தமாக வேர்க்கடலை வாங்கி முதலில் ஒரு கடாயில் 5 நிமிடம் லேசாக சூடேற வதக்கி ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். அந்த சூட்டுடன் லேசாக தரையில் வைத்து தேய்த்தால் போதும் சுலபமாக கடலை தனியாகவும், அதனுடைய தோல் தனியாகவும் வந்துவிடும். அதன் பிறகு நீங்கள் பூரி, வடை எல்லாம் எடுக்கும் இரும்பு ஜர்ணியில் போட்டு சலித்தால் போதும். வேர்கடலை தனியாக கிடைத்துவிடும். பிறகு தோலை குப்பையில் தூக்கி எறிய வேண்டியது தான். இதனை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், எப்பொழுது தேவையோ வேர்கடலையை எடுத்த சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக இனி வீட்டையே குப்பையாக்க வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

குறிப்பு 2:
பொதுவாக மிக்ஸியில் ஏதாவது ஒரு வித்தியாசமான பொருட்களை போட்டு அரைக்கும் பொழுது அதில் இருக்கும் வாசம் ஜாருடன் சேர்ந்து ஒட்டிக் கொள்ளும். நாம் என்னதான் செய்தாலும் அந்த வாசத்தை போக்க முடியாது தவிப்போம். மிக்ஸி ஜார் சுத்தம் செய்ய கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி, அதனுடன் கொஞ்சம் பல் தேய்க்கும் டூத் பேஸ்ட்டை கலந்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் போதும். எத்தகைய வாசனையும் ஜாரை விட்டு எளிதாக நீங்கிவிடும்.

mixie

குறிப்பு 3:
பல் தேய்க்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் காலி ஆன பிறகு தூக்கி எறிந்து விடுவது உண்டு. அதன் அடி பாகத்தை மட்டும் பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் டூத் பேஸ்டை தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்துவிட்டு, அதனை நீங்கள் டூத் பிரஷ் மூடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். டூத் பிரஸ் மூடி இல்லாமல் வைத்தால் அதன் மீது உட்காரும் ஈ, எறும்பு, பூச்சிகள் போன்றவற்றால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே டூத் பிரஷ் வாங்கும் பொழுது மூடியுடன் வாங்குங்கள் அல்லது இது போல் ஏதாவது செய்து பாதுகாப்பாக மூடி வையுங்கள்.

- Advertisement -

குறிப்பு 4:
சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது பால், குழம்பு போன்ற ஏதாவது ஒரு உணவு வகையை தீய்ந்து போகும்படி செய்து விட்டால் சமையலறை முழுவதுமே அந்த வாடை விட்டு செல்லவே செய்யாது. தீய்ந்து போன வாடையை சமையல் அறையில் இருந்து அகற்ற ஒரு பழைய தவா அல்லது இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் காபி பவுடரை போட்டு சூடு ஏற்றி புகை வர செய்தால் போதும். வீடு முழுவதும் நல்ல மணம் வீசும். தீய்ந்த வாடை கொஞ்சம் கூட வராது. மேலும் இந்த வாசத்திற்கு சமையலறையில் இருக்கும் குட்டி குட்டி கரப்பான் பூச்சிகள் கூட தலை தெறிக்க ஓடி விடும். உங்கள் கிச்சனே சுத்தமாகிவிடும், முயற்சி செய்து பாருங்கள்.

cofee-powder

குறிப்பு 5:
வாங்கிய நெய் டப்பா காலி ஆனாலும் அதில் இருக்கும் அடி நெய்யை நம்மால் எடுத்து பயன்படுத்த முடியாது. இதற்கு அசத்தலான ஒரு டிப்ஸ் உண்டு. கொஞ்சம் லேசாக தண்ணீரை சூடு படுத்தி அந்த டப்பாவில் ஊற்றி ஒரு குலுக்கு குலுக்கினால் போதும். நெய் முழுவதும் தண்ணீருடன் கலந்து விடும். டப்பா பிளாஸ்டிக் என்பதால் தண்ணீர் அதிகம் சூடாக இருக்கக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு ஊற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

- Advertisement -