உங்கள் கட்டிலுக்கு கீழே இருக்க வேண்டிய இந்த 6 பொருட்களால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

bed-gold

முந்தைய காலத்தில் எல்லாம் இரவில் தூங்கும் பொழுது சில பொருட்களை தன்னுடனே வைத்துக் கொண்டு தூங்கச் செல்வார்கள். இதைத் தெரிந்து செய்தார்களா? அல்லது தெரியாமல் செய்தார்களா? என்பது தெரியாது! ஆனால் உண்மையில் அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அவர்கள் பயன்படுத்திய அந்த காலத்திய உலோகப் பொருட்கள் மனிதனுடைய உடலுக்குள் ஆற்றல்களை தூண்டி விடக்கூடியவை. அவ்வகையில் நாமும் இந்த பொருட்களை எல்லாம் கட்டிலுக்கு மற்றும் தலையனைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்க சென்றால் என்னவெல்லாம் நிகழும்? என்பதை தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sembu-sombu

இரவு நேரத்தில் அவர்கள் எழுந்து தண்ணீரை தேடிக் கொண்டிருக்க முடியாது. அதனால் எப்பொழுதும் மண் சட்டி அல்லது தாமிர பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு தான் தூங்குவார்கள். அக்காலத்தில் பயன்படுத்திய தாமிரம் உடலுக்குள் தீய எண்ணங்களை நமக்கு வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தாமிர உலோகத்திற்கு ஈர்க்கக்கூடிய சக்தி உண்டு என்பதை அறிவியல் பூர்வமாக எப்பொழுதோ நிரூபிக்கப்பட்ட ஒன்று. மின் காந்த அலைகளை ஈர்க்கும் தாமிரம், மனிதனுடைய உடம்பிலும் ஆற்றல்களை ஈர்க்க வல்லது. இதனால் தாமிரத்தில் தண்ணீரை நிரப்பி கட்டிலுக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்குவதால் தீய சிந்தனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

தாமிரம் மட்டுமல்லாமல் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் கூட நமக்கு நேர்மறை சிந்தனைகளை கொடுக்குமாம். வெள்ளி பாத்திரம் வைத்திருப்பவர்கள் வெள்ளியிலும் தண்ணீரை வைத்துக் கொண்டு தூங்க செல்லலாம். தங்கம் விற்கும் விலைக்கு தங்கப் பாத்திரத்தில் எல்லாம் தண்ணீர் வைக்க முடியாது. ஆனால் நம் உடம்பில் குண்டுமணி தங்கம் ஆவது நிச்சயம் இருக்கும். நீங்கள் அணிந்திருக்கும் மோதிரமோ அல்லது வேறு ஏதேனும் தங்க பொருட்கள் இருந்தால் கூட அவற்றை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கினால் மனதில் குழப்பங்கள் இல்லாமல் நிம்மதியான உறக்கம் வருமாம்.

Today Gold rate

மஞ்சள் கிழங்கு மற்றும் சந்தன கட்டை வீட்டில் வைத்து இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்பார்கள். மங்கல பொருட்கள் வீட்டில் இருப்பதால் நல்ல விஷயங்கள் எல்லாம் நடைபெறும். அந்த வகையில் மஞ்சள் கிழங்கு ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்வதால் தெளிவான சிந்தனைகளும், குழப்பமில்லாமல் முடிவெடுக்கும் எண்ணங்களும் அதிகமாகுமாம். இதே போல் சிறிய சந்தனக்கட்டையை வெள்ளைத் துணியில் முடிந்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவும் முழுமுதற்கடவுளான விநாயகருக்கு உகந்த அரச இலை ஒன்றை தலையணைக்கு கீழே வைத்து தூங்கலாம். நல்ல அதிர்ஷ்டம் உண்டாகவும், வீட்டில் வருமானம் பெருகி செல்வச் செழிப்பு அதிகரிக்க வெள்ளியாலான மீன் சின்னத்தை ஜோடியாக வாங்கி அதனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

silver fish

நாணயத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. 2000 ரூபாய் நோட்டை விட, 1 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு தனித்துவமானது. இறைவனுக்கு நாம் செய்யும் ஆடம்பர பரிகாரங்களை விட, ஒரு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே நிறைவேறும் என்பது ஐதீகம். நாணயங்களில் ஒரு ரூபாய் என்பது மிகவும் அதிர்ஷ்டகரமான ஒன்று. எனவே ஒரு ரூபாய் நாணயத்தை தலையணைக்கு அடியில் எப்பொழுதும் வைத்திருங்கள். இரவு நேரத்தில் தூங்கும் பொழுது இந்த பொருட்களெல்லாம் உங்களுடன் இருந்தால் எவ்வளவு இறுக்கமான சூழ்நிலையும் மாறிவிடும். உங்களுடைய மூளையில் இருக்கும் சிந்தனைத்திறன் நேர்மறையாக மாற்றமடையும். இதனால் நிம்மதியான தூக்கமும், தெளிவான சிந்தனையும் உருவாகுமாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள் இப்படி வழிபாடு செய்தால் போதுமே! பெற்றோர் சொன்ன பேச்சை பிள்ளைகள் நிச்சயம் கேட்பார்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.