- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இப்படி செய்ஞ்சீங்கனா பாலே சேர்க்காமல் பத்தே நிமிஷத்துல இந்த பாயசத்தை செய்து முடிச்சிடலாம். இனிமே வீட்ல...

இப்படி செய்ஞ்சீங்கனா பாலே சேர்க்காமல் பத்தே நிமிஷத்துல இந்த பாயசத்தை செய்து முடிச்சிடலாம். இனிமே வீட்ல எந்த விசேஷம் ஆனாலும் இந்த பாயாசத்தை தான். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.

- Advertisement -

நம் தமிழர் உணவு பழக்க வழக்கங்களில் இந்த பாயாசத்திற்கு என எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் வடை பாயாசத்துடன் சாப்பாடு போடுவது தான் வழக்கம். இந்த வடை, பாயாசம் இது இரண்டுமே மிகவும் பிரதானமான உணவு வகைகள் தான். இந்த சமையல் குறிப்பு பதிவில் ஜவ்வரிசி பாயசத்தை பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக அதே நேரத்தில், அதிக ருசியாக ஒரு பாயாசம் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1 கப், சேமியா -1 கப், சர்க்கரை – 2 கப், நெய் -4 டேபிள் ஸ்பூன், முந்திரி, திராட்சை – 1 கைப்பிடி, ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த பாயாசம் செய்ய முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் ஜவ்வரிசி போட்டு வறுக்க வேண்டும். ஜவ்வரிசி நன்றாக வெந்து அது கண்ணாடி போல வெள்ளை மாற வரும். ஜவ்வரிசியை இப்படி வறுத்து விட்டால் குக்கர் விசில் கூட வைக்க வேண்டாம் சட்டென்று வெந்து விடும். இந்த ஜவ்வரிசியில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள்.

ஜவ்வரிசி வேகும் இந்த நேரத்தில் நாம் சேமியாவை வறுத்துக் கொள்வோம். அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த சேமியா, வறுக்காத சேமியா எதுவாக இருந்தாலும் ஒரு முறை நெய் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து கருகி விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்குள்ளாக ஜவ்வரிசி வெந்திருக்கும் அதில் வறுத்த சேமியாவை சேர்த்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். சேமியா சேர்த்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு சர்க்கரையை சேர்த்து (இதில் சக்கரைக்கு பதிலாக வெல்லமும் சேர்க்கலாம்) கொஞ்சம் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து விட்டு கொதிக்க விடுங்கள்.

இப்போது கடைசியாக ஒரு சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதை இந்த பாயாசத்தில் சேர்த்து இறக்கி விடலாம். அவ்வளவு தான் சுவையான ஜவ்வாரிசி பாயாசம் பத்து நிமிஷத்தில் தயார்.

இதையும் படிக்கலாமே: சுட்ட மிளகாய் ரசம் இப்படி செஞ்சு பார்த்திருக்கீங்களா? 5 நிமிஷத்தில் வித்தியாசமான அருமையான ரசம் செய்வது எப்படி?

இதில் பால் சேர்த்தால் நாம் உடனே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். பால் சேர்க்காமல் இது போல செய்தால் ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சூடுபடுத்தி வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் பாயசம் கெட்டு போகாது. இதே பாயாசத்தை பால் சேர்த்து தான் சாப்பிட வேண்டும் என்றால், நீங்கள் சாப்பிடும் முன் கொஞ்சம் பாலை காய்ச்சி இதில் ஊற்றி அதன் பிறகும் கூட சாப்பிடலாம் சுவை பிரமாதமாகவே இருக்கும்.

சற்று முன்