சுவையான சுட்ட மிளகாய் ரசம் செய்முறை

- Advertisement -

சுட்ட மிளகாய் ரசம் | Milagai rasam recipe in Tamil

பல வகையான ரசத்தில் இதுவும் ஒரு வகையான ரசம் ஆகும். இந்த ரசம் செய்வதற்கு மிளகாயை சுட்டு எடுக்க வேண்டும். நெருப்பில் சுட்ட இந்த மிளகாயை கொண்டு ரசம் இப்படி வைக்கும் போது, அதன் சுவை வித்தியாசமாகவும், டேஸ்டியாவும் இருக்கும். ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் உங்களுக்கு பத்தவே பத்தாது. நீங்கள் ஊற்றி ஊற்றி சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடிய அளவிற்கு அருமையான சுவையில் உள்ள இந்த சுட்ட மிளகு ரசம் ரெசிபி எளிதாக எப்படி வைக்கலாம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு தகவல்களின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

புளி – எலுமிச்சை பழ அளவு, வர மிளகாய் – 10, பூண்டு பல் – 10, கருவேப்பிலை – ரெண்டு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

சுட்ட மிளகாய் ரசம் செய்வதற்கு முதலில் பத்து வர மிளகாய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை காம்புடன் அப்படியே நெருப்பில் காண்பித்து சுட்டு எடுக்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த தீயில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு மிளகாய் மிளகாயை இடுக்கி அல்லது அதன் காம்பு பகுதியை பிடித்துக் கொண்டு லேசாக வாட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாட்டும் போது நெருப்பு பிடிக்க வாய்ப்பு உண்டு எனவே கவனமுடன் இருப்பது நல்லது.

லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும், இந்த சமயத்தில் நீங்கள் மிளகாயை ஆட்டி பார்த்தால் உள்ளே இருக்கும் விதைகளின் சத்தம் கேட்க வேண்டும். இது சரியான பதமாகும். இப்போது எலுமிச்சை பழ அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். சிறிது நேரம் ஊறியதும் தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். முழுவதுமாக கசக்கி இந்த புளி சக்கையை எடுத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த புளி தண்ணீரில் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேருங்கள். நீங்கள் சுட்டு வைத்துள்ள மிளகாயையும் ஒன்றிரண்டாக பிய்த்து போடுங்கள். பின்னர் இரண்டு கொத்து கருவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து நறுக்கி சேருங்கள். பத்து பல் பூண்டை தோலுடன் இடித்து அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இப்படி மட்டும் ஆம்லெட் போட்டால் ரெண்டு மூன்று ஆம்லெட் சாப்பிடும் இடத்தில் ஒரு முட்டை இருந்தா கூட போதும் அவ்வளவு நிறைய கிடைக்குமே!

பின்னர் நீங்கள் கூட்டி வைத்துள்ள ரத்தத்தை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், இந்த சுவையான சுட்ட மிளகு ரசம் மட்டும் இருந்தா போதும், எந்த குழம்புமே வேண்டாம், எவ்வளவு சாதம் வேண்டுமானாலும் ரசித்து, ருசித்து சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். அந்த அளவிற்கு சுவை தரக்கூடிய இந்த சுட்ட மிளகு ரசத்தை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -