- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilதோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர

- Advertisement -

சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைத்து தரப்பினரும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த அழகை நமக்கு ஏற்படுத்த நம் தோலில் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்க வேண்டும். நம் உடலிலேயே மிகவும் பெரிய உறுப்பாக கருதப்படுவது தோல் தான். இந்தத் தோலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது நம்முடைய அழகையே பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்படும் பொழுது அதற்காக நாம் அதிகமாக செலவு செய்வோம். அவ்வாறு எந்தவித செலவும் செய்யாமல் தோலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பது எப்படி என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முகத்தில் இருக்கக்கூடிய தோலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் பருக்கள் தோன்றும். கரும்புள்ளிகள் ஏற்படும். தழும்புகளும் ஏற்படும். இதே நம்முடைய தலையில் இருக்கும் தோலில் பிரச்சினை ஏற்படும் பொழுது பொடுகு பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடம்பில் இருக்கும் தோலில் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது சிகப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏற்படும். வேர்க்குரு கட்டிகள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். ஆக மொத்தத்தில் நம் அழகை பாதிக்க கூடிய அனைத்து பிரச்சனைகளும் தோலினால் ஏற்படுகின்றது.

- Advertisement -

இந்த தோலை நாம் முறையாக பராமரித்தோம் என்றால் நம் உடல் என்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்கும். அவ்வாறு நம் உடல் முழுக்க இருக்கக்கூடிய தோலை பராமரிப்பதற்கு நாம் எந்தவித செலவும் செய்யாமல் எவ்வாறு பாதுகாக்கலாம் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

நம் தோலிற்கு தேவையான அனைத்து விதமான விட்டமின்களும் சூரிய ஒளியில் இருந்து நமக்கு கிடைக்கிறது. விடியற்காலையில் நாம் எழுந்து குளித்துவிட்டு சூரிய உதயத்தின் பொழுது அரை மணி நேரம் அந்த இளம் சூரிய ஒளியில் நாம் நின்றோம் என்றால் நம் தோலிற்கு தேவையான அனைத்து விதமான விட்டமின்களும் நமக்கு கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது. குளிக்க இயலாதவர்கள் முகம் கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு கூட போய் நிற்கலாம்.

- Advertisement -

இதனால் முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள், கரும்புள்ளிகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் தலையில் இருக்கக்கூடிய முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கும் இது ஒரு நல்ல தீர்வை தருகிறது என்று கூறப்படுகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகளை இந்த சூரிய ஒளி தீர்க்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. தொடர்ந்து ஒரு வாரம் இவ்வாறு சூரிய ஒளியில் நாம் இருந்தோம் என்றால் நம்முடைய உடலில் பல அற்புதமான மாற்றங்கள் ஏற்படுவதை நம்மால் கண்கூடாக காண முடியும்.

இதையும் படிக்கலாமே: உங்க முடி 2 மடங்கு வேகமாகவும், 2 மடங்கு அடர்த்தியாகவும் வளர, இந்த ஒரு பேக் மட்டும் போதும். இரண்டே மாதத்தில் ரிசல்டை இன்ச் டேப் வைத்து அளந்து பார்க்க சேலஞ்ச் கொடுக்கும் ஹேர் பேக் இது.

இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த அற்புதமான சூரிய ஒளியை பயன்படுத்தி சூரிய குளியலை மேற்கொண்டு நம் தோலின் ஆரோக்கியத்தை பேணி காப்போம்.

சற்று முன்