- Advertisement -
Homeஜோதிடம்ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் மாற்றம் மற்ற 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல ஒரு ராசி ஒரு கிரகம் பயணிக்கும் போது இன்னொரு கிரகமும் அதே ராசியில் இணைந்து பயணிக்கும் போது இன்னும் அதீத பலன்களை தரும். அது நற்பலனாகவும் இருக்கலாம் அசுப பலனாகவும் இருக்கலாம்.

எந்த வகையில் புத பகவான் மார்ச் மாதத்தில் மீன ராசியில் பயணிக்க உள்ளார். ஏற்கனவே அந்த ராசியில் ராகு பகவான் இருக்கிறார். இந்த செயற்கையானது ஜோதிட சாத்திரத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ளதால் ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நற்பலனை பெறக் கூடிய மூன்று ராசிக்காரர்களை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

கிரகங்களில் சனி பகவானுக்கு பிறகு மெதுவாக நகரக் கூடிய கிரகமாக ராகு பகவான் இருக்கிறார். இவர் ஒரு ராசியில் பயணித்தார் எனில் அங்கு பெரும்பாலும் அசுப பலன்களையே தரக்கூடியவர். அது மட்டும் இன்று இவர் எப்போதும் தன்னுடைய பயணத்தை பின்னோக்கிய நகர்த்தக் கூடியவர். ஆகையால் தான் ராகு திசை இருந்தால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

புதபகவான் இந்த நவகிரகங்களிலே இளவரசனாக கருதப்படுகிறார். இவர் புத்திசாலித்தனம், அறிவு, திறமை, கல்வி, ஞானம், பகுத்தறிவு, முன்னேற்றம் என அனைத்திற்கும் காரணமாக விளங்குபவர். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தன்னுடைய இடத்தை மாற்றக் கூடிய தன்மை உடையவர். இந்த இருவரின் இணைவு காரணமாக ஏற்படக்கூடிய நற்பலனை இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

மிதுன ராசி

ராகு புதன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு பலவிதமான யோகங்கள் கிடைக்கப் போகிறது. வேலை மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமானன சூழ்நிலை நிலவும். வருமானம் உயர்ந்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கும் ராகு புதன் சேர்க்கை நற்பலன்களையே தரவுள்ளது. இதன் மூலம் இவர்கள் பணியிடத்தில் சிறந்து விளங்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். இது வரை எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவிற்கு குறைவு இருக்காது. பொருளாதார நிலை மேம்படும்.

- Advertisement -

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை பல நல்ல பலன்களை தர உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் நடைபெறாமல் இருந்த வேலைகள் நடக்கும். வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகள் பெருகும். திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இதிலும் அவரவர் கிரக ஜாதக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும் இந்த பதிவில் உள்ள ஜோதிட தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

சற்று முன்