பெரும்பாலும் உப்பு தண்ணீர் உள்ள இடங்களில் வாஷ்பேஷனையும், சிங்கையும் உப்பு கறை இல்லாமல் சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உப்பு கறைகளை நீக்குவதற்கு இப்போது கெமிக்கல் கலந்த ஏராளமான பொருட்கள் கடைகளில் விற்கின்றது. ஆனால், அதெல்லாம் ஆரோக்கியத்திற்கு எத்தனை நல்லது என்பது தெரியாது. உங்க வீட்டு சிங்க் உப்பு கறை படிந்து ரொம்பவும் மோசமான நிலையில் உள்ளதா. இந்த பயனுள்ள வீட்டுக் குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்.
உப்பு கறை படிந்த சிங் சுத்தம் செய்யும் முறை
இந்த குறிப்புக்கு நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் செங்கல் தூள். ஒரு செங்கல்லை நன்றாக இடித்து நசுக்கி சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொரகொரன்னு செங்கல் தூள் எடுத்துக்கொண்டு, சிங்க் அடைத்துக் கொண்டால் பிறகு யாரும் பொறுப்பாக முடியாது. நைசான செங்கல்பொடி எடுத்துக் கொள்ளுங்கள்.
2 ஸ்பூன் செங்கல்பொடி, 1 ஸ்பூன் துணி துவைக்கும் பவுடர், இந்த இரண்டு பொருளையும் கரைப்பதற்கு தேவையான புளித்த தயிர். வெயில் காலம் என்பதால் நிறைய தயிர் புளித்து போகும். அதை எடுத்து கீழே கொட்டாதீங்க அப்படி இல்லை என்றால் புளித்த இட்லி மாவு. மாவு தீரும் போது அடியில் இருக்கும் மாவு புளித்து போய் கீழேதான் கொட்ட போறீங்க. அதை இனிமே இப்படி பயனுள்ளபடி மாற்றிக் கொள்ளுங்கள்.
ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் செங்கல் தூள், துணி துவைக்கும் பவுடர், இந்த இரண்டு பொருட்களை பேஸ்ட் போல கலக்குவதற்கு புளித்த தயிர் அல்லது புளித்த இட்லி மாவு இந்த பொருட்கள் மட்டும் போதும். தண்ணீர் ஊற்றி இதை கரைக்க கூடாது. ஒரு ஸ்டீல் நரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை தொட்டு உப்பு கறை படிந்த சிங்க் முழுவதும் தடவி விடுங்கள்.
உப்பு கறை படிந்த குழாயிலும் இதை தடவலாம். 20 லிருந்து 30 நிமிடங்கள் இந்த கலவையானது சிங்கில் நன்றாக ஊறட்டும். பிறகு இந்த ஸ்டீல் நாரை வைத்து எல்லா இடத்திலும் நன்றாக தேய்த்து விடுங்கள். கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தேய்க்கும் போது சிங்கிள் ஒட்டி இருக்கும் அழுக்கு, உப்பு கறை பிசுபிசுப்பு தன்மை எல்லாமே நீங்கிவிடும்.
இந்த முறையில் ஒரு முறை சிங்கை நீங்கள் கழுவி விட்டால், அடுத்த ஒரு மாசத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. சாதாரணமாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தால் மட்டுமே போதும். மீண்டும் ஒரு மாதம் கழித்து இதே போல சிங்கை கழுவினால் எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள் சிங் உப்பு கறை படியாமல் புதுசு போல சுத்தமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்
ஸ்டீல் சிங்க், கருப்பு நிற கல்லில் போடப்பட்டிருக்கும் சிங்க், பீங்கானில் இருக்கும் வாஷ் பேஷன் இப்படி எந்த வகை டைல்ஸுக்கும் இந்த குறிப்பை பின்பற்றலாம். இல்லத்தரசிகளுக்கு இந்த வீட்டு குறிப்பு நிச்சயம் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.