- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

- Advertisement -

முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும் நிச்சயமாக முருகப்பெருமானை பார்த்து கேள்வி கேட்காமல் இருக்கவே மாட்டோம். உங்களுக்கும் ஏதாவது வேண்டுதல் நிலுவையில் உள்ளதா, அதை முருகப்பெருமான் நிறைவேற்றி தராமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறாரா, இந்த முறைப்படி செவ்வாய்க்கிழமையில் முருகரை வழிபாடு செய்யுங்கள்.

நீங்கள் கேட்ட வரங்களை அவரால் தர மாட்டேன் என்று சொல்லவே முடியாது. நீங்கள் கேட்டதை கொடுக்கும் பவர் இந்த வழிபாட்டு முறைக்கு இருக்கு. வேண்டுதலை நிறைவேற்றி தரும் முருகர் வழிபாட்டை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வேண்டுதலை உடனே நிறைவேற்றி தரும் முருகர் வழிபாடு

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முருகர் வள்ளி தேவயானையோடு இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. உங்க வீட்டு பக்கத்தில் அப்படி ஒரு கோவில் இருந்தால் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தனி முருகரை சுற்றினாலும் தவறு கிடையாது. என்ன செய்வது வீட்டு பக்கத்தில் வள்ளி தெய்வானையோடு முருகர் இல்லை என்றால் தனி முருகர் கோவிலிலேயே இந்த வழிபாட்டை செய்யுங்கள்.

செவ்வாய்க்கிழமை தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. இல்லை என்றால் காலை 6:00 மணிக்காவது இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். முடியாதவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் முருகர் சன்னிதானத்திற்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சூரிய உதயத்திற்கு முன்பு, சூரிய உதயத்தின் போது, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நாம் செய்யும் பரிகாரங்கள் சீக்கிரத்தில் பலன் கொடுக்கும்.

- Advertisement -

முருகனுக்கு செவ்வரளி பூ வாங்கிக் கொள்ளுங்கள். அந்த அரளி பூவை உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வேண்டுதலை முருகரிடம் சொல்லுங்கள். முருகரை அடி பிரதக்ஷணம் செய்ய வேண்டும். ஒரே 1 முறை முருகரை பிரதக்ஷணம் செய்து சுற்றி வந்தால் போதும். அடி பிரதக்ஷணம் செய்யும்போது ‘ஓம் நமோ சரவணபவ’ என்ற மந்திரத்தை மட்டும் மனதிற்குள் சொல்லுங்கள். வேறு சிந்தனை மனசுக்குள் இருக்கக் கூடாது. உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் நடுவில் முருகனும், முருகருடைய மந்திரமும், உங்களுடைய வேண்டுதலும் மட்டும்தான் இருக்கனும். மனதை ஒருநிலைப்படுத்தி முருகரை அடி பிரதக்ஷணம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் கையில் இருக்கக்கூடிய அந்த செவ்வரளி பூக்களை முருகப் பெருமானுக்கு கொடுத்து சூட்ட சொல்லுங்கள். அவ்வளவுதான் வழிபாடு. 9 வாரம் செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை விடாமல் தொடர்ந்து செய்து விட்டீர்கள் என்றால், உங்கள் வேண்டுதல் பலித்து விடும். உங்கள் வேண்டுதல் முருகப்பெருமானின் காதில் விழுந்து விடும்.

- Advertisement -

பரிகாரம் சுலபமாக இருக்கிறதே என்று பார்க்காதீர்கள். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்றால் மட்டும்தான் இந்த வழிபாட்டை ஒன்பது வாரம் தொடர்ந்து செய்ய முடியும். இல்லை என்றால் இடையில் ஏதாவது தடைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. அதையெல்லாம் தாண்டி கோவிலுக்கு சென்று அடி பிரதக்ஷணம் செய்துவிட்டால் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயித்து விடுவீர்கள். பெண்களால் இந்த பரிகாரத்தை 9 வாரம் தொடர்ந்து செய்ய முடியாது.

இதையும் படிக்கலாமே: நாளை வளர்பிறை சஷ்டி திதி வழிபாடு

அவர்களுக்கு மாதவிடாய் நாட்கள் வரும் போது மட்டும் அந்த ஒரு வாரத்தை நடுவில் தவிர்த்து விடுங்கள். மற்ற காரணத்திற்காக இடையே ஏதாவது ஒரு வாரம் தவறிவிட்டாலும், மீண்டும் முதலில் இருந்து நீங்கள் இந்த பரிகாரத்தை தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களாக இருந்தால் கட்டாயம் ஒன்பது வாரம் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து முடிக்கும் பட்சத்தில் உங்கள் வேண்டுதல் 100% நிறைவேறிவிடும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்