- Advertisement -

வைகாசி விசாகம் 2024

- Advertisement -

22/5/2024 ஆம் தேதி புதன்கிழமை காலை 8:18 மணிக்கு விசாக நட்சத்திரம் பிறந்து விடுகிறது. 22/5/2024 ஆம் தேதி இரவு 7:14 மணிக்கு பௌர்ணமி திதியானது தொடங்கவிருக்கிறது. இதனால் பெரிய பெரிய முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் திருவிழாவானது 22 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது.

சில கோவில்களில் 23ஆம் தேதி இந்த வைபவம் நடக்கும். திருச்செந்தூரில் 22 ஆம் தேதி புதன்கிழமை தான் வைகாசி வைபவம் நடக்கவிருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே புதன்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பு. சரி, இந்த வைகாசி விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய விரிவான தகவலை பின்வருமாறு பார்த்து விடுவோம்.

- Advertisement -

தீராத கஷ்டத்தில் உங்கள் குடும்பம் சிக்கிக் கொண்டு தவிக்கிறதா. சாபங்கள் தோஷங்கள் எல்லாம் வீட்டில் சுப காரியங்களை நடக்க விடாமல் தடுக்கிறதா. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி விசாக நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள் அந்த பிரச்சனைகள் உடனே சரியாகும்.

உதாரணத்திற்கு சில குடும்பங்களில் தொடர்ந்து திருமணம் தடை வந்து கொண்டே இருக்கும். வயதாகி இருப்பார்கள் ஆனால் திருமணம் நடக்காமல் இருப்பார்கள். ஒவ்வொரு பரம்பரையிலும் இப்படி ஒருவருடைய வாழ்க்கை திருமணம் ஆகாமலே முடிந்துவிடும். அப்படி இல்லையா, திருமணம் நடந்திருந்தால் குழந்தைகள் இருக்காது.

- Advertisement -

சில குடும்பங்களில் குழந்தை பிறந்து இறந்து இருக்கும். சில குடும்பங்களில் எல்லாம், 40 வயதிற்கு மேலே யாருமே வாழ மாட்டார்கள். சிறு வயதிலேயே இறக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். இப்படி ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சாபம், ஒரு குடும்பத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்வது.

சாப விமோசனத்திற்கு வழிபாட்டை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு சின்ன புராண கதையை இப்போது நாம் பார்த்து விடுவோம். பராசர முனிவர் என்பவருக்கு 6 ஆண் குழந்தைகள். இந்த 6 குழந்தைகளும் ஒரு நாள், ஒரு குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த குளத்தை ரொம்பவும் அசுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

இதை பார்த்துக் கொண்டிருந்த அந்த குழந்தைகளின் தந்தை, பராசர முனிவர் அந்த பிள்ளைகளிடம் ‘பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை அசுத்தப்படுத்துவது தவறு. அங்கு வாழும் உயிரினங்களுக்கு சங்கடங்கள் கொடுப்பது தவறு, குளத்தை விட்டு வெளியே வாருங்கள்’ என்று சொல்லியும் அந்த பிள்ளைகள் அதைக் கேட்கவில்லை.

இதனால் கோபமடைந்த அந்த முனிவர் இந்த 6 பிள்ளைகளையும் மீன்களாக மாற வேண்டும் என்று சொல்லி சாபத்தை கொடுத்து விட்டார். நீண்ட நாட்களாக அந்த பிள்ளைகள் மீன்களாக மாறி, தன் தந்தை விட்ட சாபத்தால் அந்த குளத்திலேயே வசித்து வந்தனர். இந்த ஆறு பேரையும் முனி குமாரர்கள் என்று சொல்லுவார்கள். இந்த முனி குமார்களுக்கு முருகப்பெருமாள் சாம விமோசனம் கொடுக்கப்பட்ட நாள் தான் இந்த வைகாசி விசாகமாக கொண்டாடப்படுவதாக புராண கதைகள் சொல்கிறது.

வைகாசி விசாகம் 2024

இன்றளவும் திருச்செந்தூரில் ஒரு வசந்த மண்டபத்தில், இந்த முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுத்த வைபவம் நடக்கும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் திருச்செந்தூரில் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு இந்த விழாவை தரிசனம் செய்யும்போது, உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய சாபமும் விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. வாய்ப்பு இருப்பவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் தீராத இன்னல்கள் இருக்கிறது எதைத் தொட்டாலும் தோல்வி என்னால் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியவில்லை என்பவர்கள், வைகாசி விசாகத்தில், முருகப்பெருமானுக்கு உங்களுடைய செலவில் அபிஷேகம் செய்து வையுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலில் இருக்கும், முருகனுக்கு இந்த அபிஷேகத்தை செய்து வைப்பது சிறப்பு. அதுவும் முடியாது என்பவர்கள் உங்கள் கைகளால் முருகனுக்கு பசும்பால், இளநீர், தேன், விபூதி போன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

இது தவிர திருமணத்தடைவிலக, குழந்தை பாக்கியம் பெற, நல்ல வேலை கிடைக்க, பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர, பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க நோய் நொடியில் இருந்து விடுபட, ஆரோக்கியமாக வாழ என்று எந்த வரத்தை வேண்டும் என்றாலும் வைகாசி விசாகத் என்று முருகப்பெருமானிடம் விரதம் இருந்து கேளுங்கள். அந்த வரம் உடனே கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தை வசியம் செய்யும் பொருள்

உங்களுடைய வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்களாக இருந்தால் அந்த வேலுக்கு விசாக நட்சத்திரத்தன்று நிச்சயமாக பால் அபிஷேகம் செய்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வில் இக்கட்டான கசப்பான கஷ்ட காலங்கள் எல்லாம் முடிந்து வசந்தகாலம் வீசவேண்டும் என்று அந்த முருகனை பிரார்த்தனை செய்து இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்