இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளிக்கூடம் திறக்கப் போகிறது. எல்லார் வீட்டு குழந்தைகளும் ஸ்கூலுக்கு தயாராகிக் கொண்டு இருப்பார்கள். சில பேர் வீடுகளில் பழைய ஸ்கூல் பேக், பழைய லஞ்ச் பேக், பழைய யூனிஃபார்மை மீண்டும் பயன்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளை நிற துணிகளை அழுக்கு போக சுத்தம் செய்வது இல்லத்தரசிகளுக்கு பெரிய டாஸ்காக இருக்கும்.
உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வெள்ளை நிற சீருடை இருக்கிறதா. பழைய வெள்ளை நிற சீருடைகளை எல்லாம் சுத்தமாக துவைப்பது எப்படி? பழைய ஸ்கூல் பேக், பழைய லஞ்ச் பேக்களை சுலபமாக சுத்தம் செய்ய ஒரு சில ஐடியாக்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இல்லத்தரசிகளுக்கு தேவையான வீட்டு குறிப்பு
முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஸ்கூல் பேக்கை எல்லாம் எடுத்து ஜிப்பை எல்லாம் திறந்து விடுங்கள். உள்ளே பழைய பேப்பர், பென்சில், ரப்பர் வேறு ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க. பிறகு ஜிப்பை எல்லாம் துறந்தபடியே இருக்கட்டும் அப்படியே ஒவ்வொன்றாக வாஷிங்மெஷினில் எடுத்து போட்டு விடுங்கள். ஸ்கூல் பேக் லஞ்ச் பேக், இரண்டுமே ஜிப் திறந்து இருக்க வேண்டும். கவனித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பேகுக்கு உள்ளே இருக்கக்கூடிய அழுக்கு மொத்தமாக போகும்.
பிறகு வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் லிக்விட் அல்லது பவுடர், வாசனைக்காக ஃபேப்ரிக் கண்டிஷனர், துணி துவைக்கும் சோடா உப்பு 1 ஸ்பூன் போட்டு உங்களுடைய வாஷிங்மெஷினில் outdoor care என்ற மோட் இருந்தால் செட் செய்து விட்டு, அப்படியே வாஷிங் மெஷினிலேயே எல்லா பேகுகளையும் துவைத்து விடலாம். பேக்கில் இருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும். (துணி துவைக்கும் ஆப்ப சோடா மாவு 1 ஸ்பூனுக்கு மேலே போடக்கூடாது. பிறகு பேக் வெலுத்து விடும் அதையும் கவனத்தில் கொள்ளவும்.)
அது மட்டும் இல்லாமல் இப்படி துவைத்த பேக்கை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திலேயே நல்ல வெயிலில் காய வைத்து எடுத்தால் போதும் உங்களுடைய பேக் ரெடி ஆகிவிடும். இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.
அதே போல உங்க வீட்டு பிள்ளைகளின் பழைய யூனிஃபார்ம் இருக்கும். வெள்ளை நிற சீருடைகள் கொஞ்சம், லைட் கலர் யூனிஃபாமுக்கு இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றலாம். 1/2 பட்கெட் அளவு வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துணி துவைக்கும் சோடா உப்பு 1 ஸ்பூன், துணி துவைக்கும் லிக்விட் அல்லது பவுடர் 2 ஸ்பூன், hydrogen peroxide 2 மூடி, ஊற்றி தண்ணீரை நன்றாக கலந்து விடுங்கள். (10 சின்ன துணிகளுக்கு மேலே சொன்ன அளவு சரியாக இருக்கும்.)
பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளை நிற சீருடைகள் எல்லாம் இந்த தண்ணீரில் முக்கி 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பிறகு இந்த துணியை எல்லாம் எடுத்து பிழிந்து பார்த்தாலே தெரியும். துணியில் இருக்கும் அழுக்கு, பாதி அந்த தண்ணீரில் வந்திருக்கும். இந்த துணிகளை எல்லாம் மீண்டும் வாஷிங்மெஷினில் போட்டு, தேவையான அளவு துணி துவைக்கும் லிக்விட், ஃபேப்ரிக் கண்டிஷனர் ஊற்றி துவைத்துக் கொள்ளுங்கள்.
தேவைப்படுபவர்கள் அந்த வெள்ளை துணிகளுக்கு நீலம் போட்டு வெயிலில் காய வைத்து, அயன் செய்து பிறகு பயன்படுத்தினால் உங்களுடைய பழைய சீருடை பார்ப்பதற்கு புதுசு போல தெரியும். மொத்தமாக புதுசாக மாறும் என்று சொல்ல வரவில்லை. சாதாரணமாக துவைப்பதற்கும், இந்த hydrogen peroxide லிக்விட் ஊற்றி துவைப்பதற்கு நான்கிலிருந்து ஐந்து மடங்கு கூடுதல் வெண்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க.
இதையும் படிக்கலாமே: கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து தப்பிக்க
இந்த லிக்விட் ஆன்லைனில் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன இந்த வீட்டு குறிப்பு இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.