கஷ்டமான சூழ்நிலை ஏற்படும் பொழுது பிறரிடம் இருந்து கடன் வாங்க கூடாது என்பதற்காக தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த நகையை கொண்டு போய் அடமானத்தில் வைத்து அந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வர முயற்சி செய்வார்கள். அதன் பிறகு அந்த நகையை திருப்புவதற்காக எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த நகை திருப்ப முடியாமல் இருக்கும். பல வருட காலமாக அந்த நகைக்கு வட்டியை மட்டுமே கட்டிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் அந்த வட்டியை கட்டுவதற்கு முடியாமல் மூழ்கும் சூழ்நிலை கூட உண்டாகி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் படிக்க வேண்டிய பதிகத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அடமான நகையை திருப்ப பதிகம்
மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சனையில் இருந்தும் வெளியில் வருவதற்கு நால்வர் பாடிய பதிகங்கள் பல இருக்கின்றன. அப்படிப்பட்ட பதிகத்தில் ஒன்றான இந்த பதிகத்தை முழு மனதுடன் தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருளால் கடன் பிரச்சினைகள் தீரும். குறிப்பாக அடமானத்தில் இருக்கும் நகைகள் திருப்புவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும்.
இந்த பதிகம் ஏழாம் திருமுறையில் இருக்கிறது. இந்த பதிகத்தை பாடியவர் சுந்தரர். பாடிய ஸ்தலம் திருமுதுகொன்றம். இந்த பதிகத்தை நம்பி பதிகம் என்று கூறுவார்கள். கடன் பிரச்சனை தீரவும், கடனால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கவும், தேவையான அளவு பண வரவை பெறுவதற்கு இந்த பதிகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
பதிகம்
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மமு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே…
இந்த பதிகத்தை காலையிலோ, மாலையிலோ தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு தினமும் வீடு பூஜை அறையிலோ, சிவன் கோவிலோ அமர்ந்து கொண்டு பாராயணம் செய்யும்பொழுது சிவபெருமானின் அருளால் விரைவிலேயே நகையை திருப்புவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
அப்படி நீங்கள் நகையை திருப்பும் பொழுது ரேவதி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் சென்று திறப்பினால் மொத்த நகையும் வீடு திரும்பும் என்று கூறப்படுகிறது. அப்படி ரேவதி நட்சத்திர நாள் வராத பட்சத்தில் குளிகை நேரத்தில் நகையை திருப்பும் பொழுது வீட்டில் அனைத்து நகைகளும் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் வீட்டில் இருப்பதை உணர்த்தும் ஜீவராசிகள்
மிகவும் எளிமையான இந்த பதிகத்தை முழு மனதோடு பாராயணம் செய்பவர்களுக்கு விரைவிலேயே நகை கடனை அடைத்து நகையை தீர்ப்பதற்குரிய பண வரவு ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.